Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    வலுவான எடுத்துக்காட்டுகள்

    மனிதர்மேல் தேவன் ஊற்றிய அன்பின் ஆழத்தை அளவிட முடியாது. அவ்வளவு அன்பைப் பெற்றவர்கள் மேலோட்டமாக மட்டுமே நன்றிகாட்டுவதைக் கண்டு தூதர்கள் ஆச்சரியமடைகிறார்கள். கொஞ்சங் கூட மனிதர்கள் அதைப் பாராட்டாததைக் கண்டு தூதர்கள் வியக்கிறார்கள். மனித ஆத்துமாக்கள் புறக்கணிக்கப்படுவது பரலோகத்தை வெகுளச்செய்கிறது. அதை கிறிஸ்து எவ்வாறு பார்க்கிறாரென நாம் அறிந்துகொள்ளமுடியுமா? கடுங்குளிரிலும் பனியிலும் தங்கள் குழந்தை தொலைந்துபோயிருக்க, அதைக் காப்பாற்றியிருக்கக் கூடியவர்கள் அந்தக்குழந்தை மடிந்து போகும்படி விட்டுவிட்டார்களெனத் தெரிந்தால் அந்த அப்பா அம்மாவுக்கு எப்படி இருக்கும்? மிகுந்த துக்கமடையமாட்டார்களா? வெகுண்டெழமாட்டார்களா? அன்பின் மிகுதியால் கண்ணீர் சிந்தி, அந்தக் கொலைகாரர்கள்மேல் மிகுந்த கோபங்கொண்டு, அவர்களைக் குற்றப்படுத்தமாட்டார்களா? ஒவ்வொரு மனிதனுடைய பாடுகளும் தேவபிள்ளையின் பாடுகளாகும். அழிந்துபோகிற தங்கள் சகமனிதனுக்கு உதவிக்கரம் நீட்டாதவர் தேவனுடைய நீதியான கோபத்தைத் தூண்டிவிடுகிறார். 1DA, 825TamChS 125.3

    ஒரு மனிதனைப்பற்றி வாசித்தேன். குளிர்காலத்தில் மிகவும் பனிபடர்ந்த, சறுக்கலான வழியில் அவன் பயணித்துக் கொண்டிருந்தபோது, குளிரால் உடல் மரத்தது; அவன் அறியாமலேயே உடல் பெலனெல்லாம் குறைந்து கொண்டிருந்தது. உறையவைக்கும் பனியில் கிட்டத்தட்ட மரிக்கும் நிலைக்குச் சென்றான். பிழைப்பதற்கான முயற்சியை கிட்டத்தட்ட கைவிட்டான். அப்போது சகபயணி ஒருவனுடைய முனகல் சத்தம் கேட்டது. இவனைப் போலவே அவனும் மரிக்கும் தருவாயில் இருந்தான். அவனைக் காப்பாற்ற நினைத்தான். அந்தத் துர்ப்பாக்கியசாலியின் பனி மூடிய கால்களைத் தேய்த்துவிட்டான். சிறிதுநேர முயற்சிக்குப்பிறகு, அவனை எழுந்திருக்கச் செய்தான். அவனால் நிற்கமுடியவில்லை . எனவே, தன் அன்பான கரங்களில் அவனைத் தாங்கிக் கொண்டு, தனியே தான் செல்ல முடியாதென நினைத்திருந்த சறுக்கலான வழியில் அவனை அழைத்துச் சென்றான். பாதுகாப்பான இடம் வரையிலும் அவ்வாறு சென்ற பிறகுதான் ஓர் உண்மை புலப்பட்டது. அதாவது, அந்த மனுஷனுக்கு உதவிசெய்யப் போய், இவனும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் அந்த உண்மை. அடுத்தவனைக் காப்பாற்ற வேண்டுமென்கிற ஊக்கமான முயற்சி, இவனுடைய நரம்பில் உறைந்துகொண்டிருந்த இரத்தத்தை உயிர்ப்பெறச்செய்து, உடலின் மேற்பகுதி முழுதும் இதமான வெப்பத்தைக்கொடுத்தது. வாலிபர்கள் தங்களுடைய கிறிஸ்தவ அனுபவத்தில் இதுபோன்ற விளைவுகளைக் காணலாமென போதனையால் மட்டுமல்ல, எடுத்துக்காட்டாலும் இந்தப் படிப்பினைகளை அவர்களுக்கு வலியுறுத்திக் கொண்டே இருக்கவேண்டும். 24T, 319,320TamChS 126.1

    சத்தியத்தின் அறிவைப் பெறும் பாக்கியம் கிடைத்தது போது மெ ன முடங்கிவிடக்கூடாது; திருப்தியடையக்கூடாது. உங்களுக்கு சத்தியத்தைச் சொன்னது யார்? வேத வசனத்தின் வெளிச்சத்தை உங்களுக்குக் காட்டியது யார்? விளக்கை கொளுத்தி மரக்காலின் கீழ் வைப்பதற்கு, தேவன் அதை உங்களுக்குத் தரவில்லை. சர் ஜான் ஃபிராங்கிளினைக் கண்டுபிடிக்கும்படி அனுப்பப்பட்ட கூட்டத்தினரைப்பற்றி வாசித்தேன். தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்ட தைரியசாலிகள், வடக்குக் கடல்களில் சுற்றித்திரிந்தார்கள், இடர்பாடுகளையும் பசியையும் குளிரையும் இக்கட்டையும் சந்தித்தார்கள். இதெல்லாம் எதற்காக? இறந்துபோன ஆய்வுபயணிகளின் சரீரங்களைக் கண்டுபிடித்த பெருமையைப் பெறலாம்; சரியான நேரத்திற்கு உதவிகிடைத்தால் கொடிய மரணத்திலிருந்து தப்புவதற்கு வாய்ப்பிருந்த ஒரு சிலரைக் காப்பாற்றின பெருமையைப் பெறலாம். மரணத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றியிருந்தால்கூட, தாங்கள் பட்ட பாடுகளுக்கு பலன் கிடைத்ததாக அவர்கள் எண்ணலாம். இதற்காக தங்கள் வசதி, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.TamChS 126.2

    இதுபற்றி யோசியுங்கள். நம்மைச் சுற்றியுள்ள விலைமதிப்பு மிக்க ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக எவ்வளவு தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்? அழிந்துபோகிற மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற, வீட்டைவிட்டுப் புறப்பட்டு, நீண்ட கடினமான பயணம் செய்வதற்கு நாம் கட்டாயப்படுத்தப்படவில்லை. நம் வீட்டிற்கு அருகாமையிலேயே, நம்மைச் சுற்றிலும், எல்லாப் பக்கத்திலும் அழிந்துபோகிற, காப்பாற்றப்பட வேண்டிய ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். தேவனை அறியாமல், அதனால் நம்பிக்கை இல்லாமல் ஆண்களும் பெண்களும் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் அக்கறை காட்டாமல் இருக்கிறோம். வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும், செயலிலாவது, “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று சொல்கிறோம். மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரையே கொடுத்த மனிதர்களை நாயகர்களென்றும், தியாகிகளென்றும் உலகம் புகழ்கிறது. நித்திய வாழ்க்கையை மனதில்வைத்து வாழ்கிற நாம், ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிற தியாகத்தை கொஞ்சங் கூட செய்யாத பட்சத்தில் எத்தகைய உணர்வுக்கு ஆளாக வேண்டும்? 1RH, Aug. 14, 1888TamChS 127.1

    நியூஇங்கிலாந்தில் உள்ள ஒரு பட்டணத்தில் ஒரு கிணறு தோண்டினார்கள். வேலை கிட்டத்தட்ட முடிகிற தருவாயில், இன் னும் ஒ ருவர் கிணற்றின் அடியில் நின்று கொண்டிருந்தபோது, மண் சரிந்து, அவரை மூடியது. உடனே உதவிவேண்டி எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. இயந்திர வல்லுனர்களும் விவசாயிகளும் வியாபாரிகளும் மீட்புப்பணியில் ஓய்வின்றி ஈடுபட்டார்கள். ஆர்வத்தோடும் மனப்பூர்வமாகவும் உதவி செய்ய வந்தவர்கள் கயிறுகளையும் ஏணிகளையும் மண்வெட்டிகளையும் மண்வாரிகளையும் கொண்டு வந்தார்கள். ‘அவரைக் காப்பாற்றுங்கள், ஓ காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரல் எழுப்பினார்கள்.TamChS 127.2

    எப்படியாவது காப்பாற்றவேண்டுமெனப் பிரயாசப்பட்டார்கள். இமைகளில் வியர்வைத் துளிகள், கடும் உழைப்பால் கைகளில் நடுக்கம். நீளமான குழாய் ஒன்றை உள்ளே புகுத்தி, அவர் உயிரோடு இருக்கிறாரா என்று கேட்கும்படி சத்தமிட்டார்கள். “உயிரோடு இருக்கிறேன். ஆனால், விரைவாகச் செய்யுங்கள். இங்கே பயமாக இருக்கிறது” என்று பதில் வந்தது. சந்தோஷத்தோடே சத்தமிட்டவாறு, புதுப்பெலத்தோடு தொடர்ந்து முயற்சித்தார்கள், கடைசியாக அவரைக் காப்பாற்றிவிட்டார்கள். அதனால் எழுந்த உற்சாக சத்தம், வானங்களையே கிழித்துவிடும்போல இருந்தது. “அவர் காப்பாற்றப்பட்டார்” என்கிற பேச்சுதான் அந்தப் பட்டணந்தோறும் கேட்கப்பட்டது.TamChS 128.1

    ஒரு மனிதனைக் காப்பாற்ற இவ்வளவு வைராக்கியமும் ஆர்வமும் ஆசையும் காட்டியது அளவுக்கதிகமானதா? நிச்சயமாக இல்லை; ஆத்தும இழப்போடு ஒப்பிடும்போது, இவ்வுலக வாழ்வை இழப்பதால் என்னவாகிவிடப் போகிறது? ஓர் உயிரை இழக்கப்போகிறோம் என்கிற அச்சம் மனிதர்களுடைய இருதயங்களில் தீவிர கவலையை உண்டாக்கினால், ஓர் ஆத்துமாவை இழப்பது, கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தால் உண்டாகும் ஆபத்தை உணர்ந்திருப்பதாகச் சொல்வோரில் எவ்வளவு ஆழமான கவலையை உண்டாக்கவேண்டும்? கிணற்றில் புதைந்த அந்த ஒரு மனிதனுடைய உயிர்மேல் அக்கறை காட்டியதுபோல, ஆத்தும இரட்சிப்புக்காக உழைப்பதில் தேவ ஊழியர்கள் மிகுந்த வைராக்கியத்தைக் காட்டவேண்டாமா? 1GW, 31,32TamChS 128.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents