Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தேவமக்களின் பொறுப்புகளும் கடமைகளும்

    கடந்துபோன நூற்றாண்டுகளில் சுவிசேஷத் திருச்சபையின் நிறுவனர்களும் தேவனுடைய சாட்சிகளும் உயர்த்திப்பிடித்த சத்தியம்- மதச்சுதந்திரம் எனும் கொடியானது, இந்தக்கடைசி போராட்டத்தில் நம்முடைய கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேத வசனத்தின் அறிவால் தேவன் ஆசீர்வதித்திருப்பவர்களிடம் இந்த மாபெரும் ஈவு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேவ வசனத்திற்கு மேலான அதிகாரம் இருக்கிறதென்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவன் நியமித்த ஓர் ஏற்பாடுதான் மனித அரசாங்கம் என் பதை நாம் உணர வேண்டும்; நியாயத்திற்குட்பட்ட வரையிலும் அதற்குக் கீழ்ப்படிவது நம் பரிசுத்த கடமையென போதிக்கவேண்டும். அதன் கோரிக்கைகள் தேவனுடைய கோரிக்கைகளுக்கு முரணாக இருக்கும்போது, மனிதர்களைவிட தேவனுக்குத்தான் கீழ்ப்படியவேண்டும். தேவனுடைய சட்டங்களுக்கெல்லாம் மேலானது வேத வசனம் என்பதை உணரவேண்டும். ‘திருச்சபை சொல்லுகிறதாவது’, அல்லது ‘தேசம் சொல்லுகிறதாவது’ என்பதை ஏற்றுக் கொள்வதற்காக, ‘கர்த்தர் சொல்லுகிறதாவது’ என்பதை ஒதுக்கி விடக் கூடாது. இவ்வுலக அரசர்களின் கிரீடங்களுக்கு மேலாக கிறிஸ்துவின் கிரீடத்தை உயர்த்தவேண்டும். 1 AA, 68,69TamChS 212.3

    ஒரு திருச்சபையாக தேவன் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணியை நாம் செய்துமுடிக்கவில்லை. ஞாயிறு சட்டம் கட்டாயமாக்கப்படுவதால் உண்டாகப்போகிற பிரச்சனையை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக இல்லை. நெருங்கிவருகிற அழிவின் அடையாளங்களைக் காணும்போது, செயல்பட விழித்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தீமை வருமென எதிர்பார்த்துயாரும் அமைதியாக உட்காரக்கூடாது; தேவன் முன்னுரைத்திருப்பதால் இந்த ஊழியம் தொடர்ந்து நடைபெறவேண்டும்; ஆண்டவர் தம் மக்களைக் காப்பார் என்கிற நம்பிக்கையால் தங்களை ஆறுதல்படுத்தக்கூடாது. மனச்சாட்சி சுதந்தரத்தைப் பாதுகாக்க எதுவுமே செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தால் தேவனுடைய சித்தத்தை நாம் செய்யவில்லை. நாம் வெகுகாலமாகப் புறக்கணித்துள்ள இந்த ஊழியத்தை செய்து முடிக்க வேண்டுமானால், ஊக்கமாகவும் வைராக்கியமாகவும் ஜெபிக்கிற ஜெபம் வானத்தை எட்டவேண்டும். அதிக ஊக்கத்தோடு ஜெபிப்போமாக; பிறகு, நம் ஜெபங்களுக்கு இசைவாக வேலையும் செய்வோமாக. 25T, 713,714.TamChS 213.1

    அச்சுறுத்துகிற ஆபத்தைத் தவிர்ப்பதற்கு நம்திறனுக்குட்பட்ட அனைத்தையும் செய்வது நம் கடமை. மக்களுக்கு முன்பாக வெளிப்படையாக நடந்து, தவறான அபிப்பிராயத்தைக் களைவதற்கு பெருமுயற்சி எடுக்கவேண்டும். மெய்விவாத கேள்வியை அவர்களுக்குமுன் எழுப்பி, மனச்சாட்சி சுதந்தரத்தைத் தடுக்கிற நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டும். 35T, 452TamChS 213.2

    நமக்கு முன்னுள்ள ஆபத்துகளைக் காட்டுகிற வெளிச்சத்தை தேவன் கொடுத்திருக்க, அதை மக்களுக்கமுன் காட்டுவதற்கு நம் திறனுக்குட்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் எடுக்காமல் இருந்தால், அவருடைய பார்வையில் எவ்வாறு குற்றமற்றவர்களாக இருக்கமுடியும்? இந்த முக்கிய விஷயம்பற்றிய எச்சரிப்பின்றி மக்கள் சந்திக்கிற நிலைமைக்கு நாம் அவர்களைத் தள்ளலாமா? 15T, 712TamChS 213.3

    மதச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேசிய சீர்திருத்தவாதிகள் வலியுறுத்த ஆரம்பித்தபோது, அச்சூழ்நிலையை நம் தலைவர்கள் துடிப்போடு எதிர்கொண்டு, அந்த முயற்சிகளை எதிர்க்க ஊக்கத்தோடு பிரயாசப்பட்டிருக்க வேண்டும். தற்காலச் சத்தியத்தை நம் மக்கள் அறியாதபடிக்கு, அந்த வெளிச்சத்தைத் தடுப்பது தேவனுக்கேற்றது அல்ல. மூன்றாம் தூதனுடைய தூதைப் பேசுகிற நம் ஊழியர்கள் அனைவருமே அத்தூதின் செய்தியை உள்ளவாறு அறிந்தவர்கள் அல்ல. தேசிய சீர்திருத்த இயக்கத்தை சிலர் முக்கியமற்றதாக நினைக்கிறார்கள்; அதில் அதிக கவனம் செலுத்தவேண்டியது பற்றி அவர்கள் சிந்திப்பதுமில்லை. அவ்வாறு சிந்தித்தால், மூன்றாம் தூதனின் தூதுக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளுக்கு நேரம் செலவிட வாய்ப்பிருப்பதாக எண்ணக்கூடும். இக்காலத்திற்கான செய்தியை இவ்வாறு விளங்கிக்கொள்கிற நம் சகோதரரை ஆண்டவர் தாமே மன்னிப்பாராக. 25T; 715TamChS 214.1

    நம் தேசத்தில் ஞாயிறு சட்டம் இயற்றப்படப்போகிறது என்று பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்; அந்தத் தருணம் இப்போது வந்திருக்கிறது; இந்த விஷயத்தில் நம் மக்கள் தங்கள் கடமையைச் செய்வார்களா என்று கேட்டுப்பார்ப்போம். கொடியை உயர்த்தவும், தங்கள் மத உரிமைகள்-சிலாக்கியங்கள் குறித்து அக்கறையுடைவர்களை முன்னணிக்கு அழைக்கவும் நாம் உதவமுடியாதா? மனிதனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படியத் தீர்மானிப்பவர்கள் ஒடுக்குதலின் கரத்தை உணரவேண்டிய நேரம் வேகமாக நெருங்குகிறது. தேவனுடைய பரிசுத்தக் கட்டளைகளை காலின்கீழ் போட்டு மிதிக்கும்போது நாம் அமைதியாக இருந்து தேவனைக் கனவீனப்படுத்தலாமா? புரொட்டஸ்டன்ட் உலகமானது ரோமுக்குச் சலுகை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்போது, அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள விழித்துக்கொள்வோம்; நமக்குமுன் உள்ள போட்டியை உள்ளபடியே கண்ணோக்குவோம். கண்காணிகள் தங்கள் சத்தத்தை உயர்த்தி, இந்நேரத்திற்கான தற்காலச் சத்தியத்தை அறிவிப்பார்களாக. தீர்க்கதரிசன வரலாற்றில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை மக்களுக்குக்காட்டி, மெய்யான புரொட்டஸ்டன்ட் மார்க்கத்தின் ஆவியை விழிக்கச் செய்து, வெகுகாலமாக அனுபவித்து வருகிற மதச் சுதந்திரச்சிலாக்கியங்களின் மதிப்பு குறித்த உணர்வை உலகத்தில் உண்டாக்குவோமாக. 15T, 716TamChS 214.2

    மதச்சுதந்தரத்திற்கும் சமுதாயச் சுதந்தரத்திற்கும் மிகவும் ஆபத்தாக விளங்குகிற இந்த எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பற்கு நம் தேசமக்கள் விழிக்கவேண்டியது அவசியம். 24SP, 382TamChS 215.1

    இந்த நெருக்கடி நேரத்தில் நம் கரங்களை மடக்கிக்கொண்டு, எதுவும் செய்யாமல் இருக்கலாமா? வருடக்கணக்கில் நம்மைப் பற்றியிருக்கும் இந்த நித்திரையிலிருந்து விழித்துக்கொள்ள தேவன் நமக்கு உதவுவாராக. 3RH, Dec. 18, 1888 TamChS 215.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents