Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    1—ஊழியத்திற்கு தேவ அழைப்பு

    மனித முகவர்களைச் சார்ந்திருத்தல்

    மனிதர்களிலிருந்துதான் தம்முடைய பிரதிநிதிகளை தேவன் தெரிந்துகொள்கிறார். விழுந்துபோகாத தூதர்களை அல்ல, தாங்கள் இரட்சிக்கப் பிரயாசப்படுகிற மனிதர்களைப் போன்றே ஆசாபா சங்களுடைய மனிதர்களைத் தெரிந்துகொள்கிறார். கிறிஸ்து மனிதர்களைத் தேடி ஒரு மனிதனாக வந்தார். மனித-தெய்வீக இயல்புள்ள ஓர் இரட்சகர்மட்டுமே உலகை இரட்சிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரி யத்தை அறிவிக்கிற பரிசுத்த பணியை ஆண்களிடமும் பெண்களி டமும் ஒப்படைத்திருக்கிறார். 1AA, p 134TamChS 15.1

    மனதைத் தொடும் இந்தக் காட்சியைப் பாருங்கள். பரலோகத்தின் மகத்துவரைச் சுற்றிலும் அவர் தெரிந்துகொண்ட பன்னிருவர் இருந்த காட்சியைப் பாருங்கள். அவர்கள் செய்யவேண்டிய பணிக்காக அவர்களைப் பிரித்தெடுக்கவிருந்தார். அந்தப் பெலவீனமான மனிதர்களைக்கொண்டு, தம்முடைய வார்த்தை மூலமாக வும் ஆவியானவர் மூலமாகவும் எல்லாரும் இரட்சிப்பைப் பெறும் மார்க்கத்தை அருளுவது அவருடைய திட்டமாக இருந்தது. 1AA, p 18TamChS 15.2

    “யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, சீமோனை அழைப்பி” என்றார் தேவன். சுவிசேஷ ஊழியத்தின்மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட சபைமேலும் தமக்கிருந்த அக்கறைக்கான ஆதாரத்தை தேவன் இங்கு வெளிப்படுத்துகிறார். சிலுவையைப் பற்றி கொர்நேலியுவுக்குச் சொல்கிற ஊழியப்பணியை தேவன் ஒரு தூதனிடம் கொடுக்கவில்லை அந்த நூற்றுக்கு அதிபதியைப் போலவே பெலவீனங்களும் சோதனைகளும் உடைய ஒருமனிதன் தான், சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரைப்பற்றி கொர்நேலியுவுக்குச் சொல்லவேண்டியிருந்தது. 2AA, p 134TamChS 16.1

    பிலிப்புவிடம் அனுப்பப்பட்ட தூதன்தாமே அந்த எத்தியோப்பியனுக்கு நற்செய்தியைச் சொல்லியிருக்க முடியும், ஆனால் தேவன் அப்படிச் செயல்படுவதில்லை. மனிதர்கள் தங்கள் சக மனிதர்களுக்காகப் பிரயாசப்பட வேண்டும் என்பது அவருடைய திட்டம். 3 AA, p 109 TamChS 16.2

    ‘இந்த மகத்துவமுள்ளவல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும் படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.’ தேவன் தம்முடைய சத்தியத்தை பாவமற்ற தூதர்கள் மூலம் அறிவித்திருக்க முடியும்; ஆனால், அது அவருடைய திட்டமல்ல. தம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளாககுறைகளுடைய மனிதர்களை அவர் தெரிந்துகொள்கிறார். விலைமதிப்பற்ற பொக்கிஷம் மண்பாண்டங்களில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆசீர்வாதங்களை மெனிதர்கள் மூலம் உலகத்திற்கு வழங்க வேண்டும். அவருடைய மகிமை அவர்கள் மூலமாகபாவ இருளுக்குள் பிரகாசிக்கவேண்டும். அன்பின் ஊழியத்தின்மூலம் அவர்கள் பாவிகளையும் தேவையில் இருப்பவர்களையும் சந்தித்து, அவர் களை சிலுவையண்டைக்கு நடத்தவேண்டும். தாங்கள் செய்கிற அனைத்துப் பணிகளிலும் எல்லாவற்றிற்கும் மேலானவருக்கே மகிமையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தவேண்டும். 4AA, p 330TamChS 16.3

    மனிதனுக்காகப் பரிந்துபேசுகிற பணியைத் தொடங்கும்படி இயேசு பரமேறிச் சென்றபிறகு, பூமியில் அவர் தொடங்கின ஊழியத்தை தம் சீடர்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என்பதே இரட்சகரின் நோக்கம். இருளில் இருப்பவர்களுக்கு நற்செய்தியின் வெளிச்சத்தைக் கொடுப்பதற்கு மனிதர்கள் விசேஷித்த ஆர்வம் காண்பிக்கமாட்டார்களா? மனிதர்களுக்கு சத்தியத்தின் வெளிச்சத்தைக் கொண்டு செல்ல பூமியின் கடையாந்தரங்கள்மட்டும் செல்ல சிலர் ஆயத்தமாக இருக்கிறார்கள்; அதுபோதாது. சத்தி யத்தை அறிந்திருக்கிற ஒவ்வோர் ஆத்துமாவும் மற்றவர்களைச் சத்தியத்திடம் வழி நடத்த வேண்டுமென்பதே தேவனுடைய ஆசை யாக இருக்கிறது. அழிந்துபோகிற நிலையில் இருக்கும் ஆத்துமாக் களை இரட்சிப்பதற்கு விசேஷவிதத்தில் நம்மை அர்ப்பணிப்பதற்கு நாம் ஆயத்தமாக இல்லையென்றால், தேவனுடைய நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கு நாம் எவ்வாறு தகுதியானவர்களாக இருக்க முடியும்? 19T,103TamChS 16.4

    நீங்கள் சத்தியத்தை அறிந்தவர்களா? சத்தியத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களை தேவன் தம் ஞானத்தால் உங்களிடம் கொண்டுவருவார். வெளிச்சத்தைப் பெற்றிருப்பவர்கள் இருளில் இருப்போருக்கு அதை அறிவிக்கவேண்டியது பரலோகத் திட்டம். ஞானத்தின் மகா ஊற்றிடமிருந்து செயல்திறனைப் பெற்று, செயல் படும் முகவர்களாக மனிதர்களை தேவன் மாற்றுகிறார்; மற்ற மனிதர்களை மாற்றக்கூடிய வல்லமையை சுவிசேஷமானது இந்தக் கருவிகள் மூலமாகத்தான் மற்றவர்கள் மனதிலும் இருதயத்திலும் உண்டாக்குகிறது. 2AA, p 134TamChS 17.1

    பாவிகளை இரட்சிக்கிற தம் நோக்கத்தை நம்முடைய உதவி இல்லாமலேயே தேவன் நிறைவேற்றியிருக்கலாம்; ஆனால் நம்மில் கிறிஸ்துவின் குணம் உருவாவதற்கு அவருடைய பணியில் நாம் கண்டிப்பாகப் பங்கெடுக்கவேண்டும். தம்முடைய தியாகப் பலியால் ஆத்துமாக்கள் மீட்படைவதைக் காண்பதுதான் அவருடைய சந்தோஷம். அந்தச் சந்தோஷத்திற்குள் நாம் பிரவேசிப் பதற்கு, அவர்களை மீட்பதற்காக அவர் எடுத்துவருகிற முயற்சி களில் நாம் பங்குபெறவேண்டும். 3DA, p 142TamChS 17.2

    மனிதர்களிருந்துதான் தம்முடைய பிரதிநிதிகளை தேவன் தெரிந்துகொள்கிறார். விழுந்துபோகாத தூதர்களை அல்ல,தாங்கள் இரட்சிக்கப் பிரயாசப்படுகிற மனிதர்களைப் போன்றே ஆசாபாசங்களை உடைய மனிதர்களைத் தெரிந்துகொள்கிறார். கிறிஸ்து மனிதர்களைத் தேடி, ஒரு மனிதனாக வந்தார். மனிதர்களின் ஒத்தாசையை தேவன் விரும்பினார்; ஏனென்றால், தேவனும் மனிதனும் சேர்ந்து உலகத்திற்கு இரட்சிப்பைக் கொண்டு வருவது அவசியமாயிற்று. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு தகவல் தொடர்பு ஊடகமாக மனிதன் விளங்கும்படி மனிதனுடைய ஒத் தாசையை தேவன் வேண்டுகிறார். 1DA, p 296TamChS 17.3

    மனிதரின் ஒத்துழைப்பு கிடைக்குமாவென்று தாங்கமுடியாத ஆவலுடன் தூதர்கள் காத்திருக்கின்றனர்; காரணம்? மனிதனுடன் தொடர்புகொள்வதற்கான ஊடகம் மனிதன் என்பதுதான். முழு இருதயத்தோடு தேவனிடம் நம்மை அர்ப்பணிக்கும்போது, தேவ வார்த்தையை நம் வார்த்தைகள்மூலம் அறிவிக்க வாய்ப்பு கிடைத்ததாக தூதர்கள் களிகூருகிறார்கள். 2DA, p297TamChS 18.1

    நாம் தேவனுடன் சேர்ந்து பிரயாசப்படவேண்டும்; மனித முகவர்களின் துணையின்றி தேவன் தம் பணியை நிறைவு செய்வ தில்லை . 3 RH, 1-3-1887 TamChS 18.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents