Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஊழியர்களின் விசேஷித்த தகுதிகள்

    சிலர் உயர் அந்தஸ்தினர்களுக்கு ஊழியம் செய்ய தகுதிபெற்றிருக்கிறார்கள். உயர் அந்தஸ்தினரை வெறுமனே அணுகுவது போதாது; தனிப்பட்ட முயற்சியாலும் உயிருள்ள விசுவாசத்தாலும் அவர்களுடைய ஆத்தும தேவைகுறித்து அவர்களில் விழிப்பு உண்டாக்கவேண்டும்; இயேசுவின் சத்தியத்தைக்குறித்த அறிவை அவர்கள் பெறவேண்டும்; அதற்காக அவர்களை அணுகுவதற்கான வழியை அறிய, தேவனிடம் ஞானம் கேட்கவேண்டும். 2MH, 213TamChS 266.1

    உயர் அந்தஸ்தினர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு தேவதூதர்கள் துணையாக இருக்கிறார்கள். இதை உணர்ந்து, மெய்யான கண்ணியத்துடன் நடக்கவேண்டும். பொக்கிஷ சாலையான தங்கள் மனதையும் இருதயத்தையும் ‘என்று எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொல்லப்படும் வார்த்தைகளால் நிரப்பியிருக்க வேண்டும். 3MH, 215TamChS 266.2

    உயர் அந்தஸ்தினர்களை அணுகுவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும், தேவ ஊழியருக்கு வலுவான விசுவாசம் தேவை. தோற்றங்கள் பயமுறுத்துவதாக இருக்கலாம்; ஆனாலும் பயங்கர இருளாகத் தோன்றும் வேளையில் மேலேயிருந்து வெளிச்சம் பிறக்கும். 4AA, 242TamChS 266.3

    உயர் அந்தஸ்தினர்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்கிற ஊக்கமிக்க, தாழ்மையான ஊழியர்களை தேவன் அழைக்கிறார். 5AA, 140 TamChS 266.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents