Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்தவனின் கொள்கை வார்த்தைகள்

    கிறிஸ்தவ வாழ்க்கையில் மூன்று கொள்கை வார்த்தைகள் உள்ளன. சாத்தான் இரகசியமாக வந்து நம்மைப் பிடிக்காதபடிக்கு, அந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும். அவை: விழித்திருங்கள், ஜெபியுங்கள், பணி செய்யுங்கள். 12T, 283TamChS 143.1

    கிறிஸ்துவை அறிக்கையிடுகிற ஒவ்வோர் ஆத்துமாவும், தான் ஆவிக்குரிய ஊழியனாக எஜமானின் சேவையில் மும்முரமாகவும், தீவிரமாகவும், நன்மையான விதத்திலும் தன்னால் முடிந்த வழிகளிலெல்லாம் பணியாற்றுவதாக உறுதிமொழி செய்திருக்கிறார். ஒவ்வொருவனும் தன் கடமையைச் செய்வதையே கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அவருடைய பின்னடியார்கள் அனைவரிலும் இதுவே கொள்கை வார்த்தையாக இருக்கட்டும். 25T, 460TamChS 143.2