Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நிச்சயம் பலன் உண்டு

    மெய்யான மனமாற்றம் பெரிய அற்புதமாகும்; அந்த அற்புதத்தை இன்று யாரும் புரிந்துகொள்ளவில்லை. இந்த உலகின் மிகப்பெரிய மனிதர்களும் அற்புதம் செய்கிற தேவனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. தேவனோடு உடன் வேலையாட்களாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால், அவர்கள் தங்களுடைய கடமையை வீரதீரமாகவும் உண்மையாகவும் செய்யவேண்டும்; அப்போது பொறுப்புமிக்க பதவிகளையும், புத்திக்கூர்மையும் செல்வாக்கும் படைத்தவர்களையும் தேவன் மனம் மாற்றுவார். ஆவியானவருடைய வல்லமையால் அநேகர் தெய்வீக நியதிகளை ஏற்றுக்கொள்வார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்தை மற்றவர்களுக்கு வழங்குகிற ஏது கரங்களாக அவர்கள் தேவனுடைய கரத்தில் இருப்பார்கள்; புறக்கணிக்கப்பட்ட ஆத்துமாக்கள்மேல் விசேஷித்த பாரமுடையவர்களாக இருப்பார்கள்; பணத்தையும் நேரத்தையும் ஆண்டவருடைய பணிக்காகப் பரிசுத்தப்படுத்துவார்கள்; திருச்சபையில் புது ஆற்றலும் திறனும் கூடுதலாகக் காணப்படும். 1AA, 140TamChS 266.5

    சமுதாயத்தின் உயர்பதவிகளில் உள்ளவர்கள் பலர் புண்பட்ட மனதுள்ளவர்களாகவும், மாயையினால் சலிப்படைந்தவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் வசம் இல்லாத சமாதானத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும் கூட இரட்சிப்பிற்காக பசியோடும் தாகத்தோடும் இருக்கின்றனர். கிறிஸ்துவின் அன்பினால் மென்மையாக்கப்பட்டவர்கள் பரிவான வகையில் தனிப்பட்ட முறையில் இத்தகையோரை அணுகும்போது, அவர்கள் அதன்மூலம் பயன்பெறுவது நிச்சயம். 2COL, 231TamChS 267.1

    பெரும் அறிஞர்களிலும் அரசியல்வாதிகளிலும் உலகின் மிக முக்கிய மனிதர்களிலும் பலர் இந்தக் கடைசி நாட்களில் ஒளியை விட்டு விலகிச்செல்கிறார்கள்; ஏனென்றால், உலக ஞானமானது தேவனை அறிந்துகொள்ளவில்லை. ஆனாலும், இந்த மனிதர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தேவ ஊழியர்கள் மேம்படுத்த வேண்டும். தேவனுக்குரியவைகளை தாங்கள் அறியாமல் இருப்பதை சிலர் ஒத்துக்கொண்டு, ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராகிய இயேசுவின் பாதத்தில் தாழ்மையோடு கற்றுக்கொள்ள தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். 3AA, 241,242TamChS 267.2