Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    20—செல்வந்தரும் செல்வாக்குமிக்கவரும்

    புறக்கணிக்கக்கூடாது

    இவ்வுலகின் செல்வந்தர்களுக்காக நாம் செய்யவேண்டிய ஊழியம் ஒன்று உண்டு. அவர்களிடம் பரலோக நன்மைகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதால்,அவர்கள் தங்கள் பொறுப்பை உணரும் படி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தோர்களையும் நியாயந்தீர்க்கிறவருக்கு கணக்கு கொடுக்கவேண்டுமென்பதை அவர்களுக்கு நினைவூட்டவேண்டும். அன்போடும் தேவபயத்தோடும் செல்வந்தர்களுக்கு நீங்கள் ஊழியம் செய்யவேண்டியது அவசியம். அநேக சமயங்களில், தன் ஆஸ்திகளில் நம்பிக்கைவைத்து அதினால் தனக்கு ஏற்படும் அபாயத்தை அவர்கள் உணர்கிறதில்லை.அவர்களுடைய மனக்கண்கள் நிலையான மதிப்புடையவற்றில் ஈர்க்கப்பட வேண்டும். 1COL, 230TamChS 264.1

    உலகத்தில் கல்வியால், செல்வத்தால் அல்லது உழைப்பால் உயர்ந்தநிலையில் இருப்பவர்களிடம், அவர்களுடைய ஆத்தும தேவைகள் குறித்து தனிப்பட்ட முறையில் எடுத்துரைப்பது அரிதாயிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை அணுக கிறிஸ்தவ ஊழியர்கள் தயங்குகிறார்கள். அப்படி இருக்கக்கூடாது. வழக்கறிஞராக, வியாபாரியாக, நீதிபதியாக இருக்கிற ஒருவர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தால், அவர் மடிந்துபோவதைப் பார்த்துக்கொண்டு நிற்கமுடியாது. ஒரு செங்குத்தான பாறையின் விளிம்பை நோக்கி பலர் செல்வதைப்பார்த்தால், அவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்தும் அழைப்பும் உடையவர்களாக இருந்தாலும், உடனே திரும்பி வரும்படி எச்சரிக்காமல் இருக்கமுடியாது. அது போல அழிவிலிருக்கும் ஆத்துமாக்களை எச்சரிக்க நாம் தயங்கக்கூடாது. 1COL, 230,231TamChS 264.2

    உயர்ந்த இடங்களில் இருப்பவர்களின் ஆத்துமாக்கள்மேல் பாரமுடையவர்களாக நாம் இருக்கவேண்டும். கல்யாண விருந்தில் கலந்து கொள்ளும்படி கிருபைமிக்க அழைப்பை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும். 2SW, Mar.15, 1904TamChS 265.1

    ஐசுவரியவான்கள் மனம்மாறி, மற்றவர்களை ஆதாயப்படுத்துவதில் அவர்கள் தம்முடைய உதவிக்கரமாகச் செயல்படவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். சீர்திருத்தமும் எழுப்புதலும் நடக்கிற ஊழியத்தில் உதவக்கூடியவர்கள் சத்தியத்தின் ஈடுஇணையற்ற வெளிச்சத்தைக் காணவேண்டும்; குணத்தில் மாற்றமடைய வேண்டும்; தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மூலதனத்தை அவரது சேவையில் பயன்படுத்த வழிநடத்தப்பட வேண்டும்; இதுவே ஆண்டவருடைய ஆசை. அவர்களுக்கு வசதிவாய்ப்புகளை கடனாகக் கொடுத்திருக்கிறார். அருகிலும் தூரத்திலும் உள்ள சகல வகுப்பினருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி வழியைத்திறப்பதிலும், நன்மை செய்வதிலும் அதை அவர்கள் முதலீடுசெய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 39T, 114TamChS 265.2

    சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களை கனிவான அன்போடும், சகோதர பாசத்தோடும் தேடவேண்டும். தொழில் செய்பவர்கள், நம்பிக்கைக்குரிய உயர்பொறுப்புகளை வகிப்பவர்கள், புதிய கண்டுபிடிப்புத்திறன் படைத்தவர்கள், அறிவியல் நுண்ணறிவு படைத்தவர்கள், மேதைகள், இக்காலத்திற்கான விசேஷித்த சத்தியத்தை அறியாத சுவிசேஷப் போதகர்கள் போன்ற இவர்கள்தாம் முதன்முதலாக இந்த அழைப்பைக் கேட்கவேண்டும். இவர்களுக்குத்தான் அழைப்பு கொடுக்கப்படவேண்டும். 4COL, 230TamChS 265.3

    போதகர்களுக்கும் உயர் வகுப்பினர்களுக்கும் சத்தியத்தை அறிவிக்க முயற்சி எடுக்காதிருத்தல் தவறு. நம் விசுவாசத்தைச் சேராதவர்கள்ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பாணிக்கு நாம் மாறுகிறவர்களாக அவர்களோடு பழகக்கூடாது. அதேவேளையில் எல்லா இடங்களிலுமே நேர்மையுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் மேல் அன்பில் நிறைந்து, அவர்களுக்காக கவனத்தோடும் ஞானத்தோடும் புத்திக்கூர்மையோடும் நாம் ஊழியம் செய்ய வேண்டும். இத்தேசத்திலும் பிறதேசங்களிலும் உள்ள உயர் வகுப்பினர்களுக்கு ஊழியம் செய்யக்கூடிய ஆண்களையும் பெண்களையும் பயிற்றுவிப்பதற்கென தனியாக நிதிதிரட்டவேண்டும். 19T, 580, 581TamChS 265.4