Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மருத்துவச் சுவிசேஷ ஊழியப்பணியாளர்கள்

    ஊழியர்கள் - சுவிசேஷ மருத்துவ ஊழியப்பணியாளர்கள் - இப்போது தேவைப்படுகிறார்கள். ஆயத்தப்பணியிலேயே பல வருடங்களைக் கழிக்கக்கூடாது. சத்தியத்திற்கு இப்போது திறந்திருக்கிற கதவுகள் சீக்கிரமே நிரந்தரமாக அடைக்கப்படப் போகின்றன. இப்போதே செய்தியைக் கொண்டுசெல்லுங்கள். இப்போது உங்களுக்குமுன் திறந்திருக்கிற களங்களை சத்துரு சொந்தமாக்க அனுமதித்து, காத்திருக்காதீர்கள். கிறிஸ்து தம் சீடர்களுக்கு நியமித்த ஊழியத்தைச் செய்வதற்கு சிறு சிறு குழுக்கள் செல்வதாக. அவர்கள் சுவிசேஷ ஊழியம் செய்து, நம் பிரசுரங்களை விநியோகித்து, தாங்கள் சந்திப்போரிடம் சத்தியம் குறித்துப் பேசுவார்களாக. அவர்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பார்களாக. மருந்துகளால் அல்ல, இயற்கை வைத்தியங்களால் அவர்களுடைய தேவைகளைச் சந்திப்பார்களாக. ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவது பற்றியும், நோய் வராமல் தடுப்பதுபற்றியும் கற்றுக் கொடுப்பார்களாக. 19T, 172TamChS 170.1

    என் சகோதர சகோதரிகளே,சேவை செய்யும்படி ஆண்டவருக்காக உங்களை ஒப்புக்கொடுங்கள். எந்த வாய்ப்பையும் மேம்படுத்தாமல் விடாதீர்கள். வியாதியிலும் வேதனையிலும் இருப்போரைச் சந்தித்து, அவர்கள்மேல் அன்புமிக்க அக்கறை காட்டுங்கள். முடிந்தால்,அவர்கள் இன்னும் சுகமாக வாழும்படி ஏதாவது செய்யுங்கள். இந்த வழிமுறைகள்மூலம் நீங்கள் அவர்களுடைய இருதயங்களில் இடம்பிடிக்கலாம், கிறிஸ்துவைப்பற்றி ஏதாவது சொல்லலாம். இத்தகைய ஊழியம் எவ்வளவு தூரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதை நித்தியம் மட்டுமே வெளிப்படுத்தும். தங்கள் அருகாமையிலேயே இருக்கிற கடமையைச் செய்ய விரும்புகிறவர்களுக்கு முன் வேறு பிரயோஜனமிக்க ஊழிய வாய்ப்புகளும் கிடைக்கும். 29T, 36TamChS 170.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents