Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    25—பரிசுத்த ஆவியானவர்

    வாக்குத்தத்தம்

    ஆவியானவர் குறித்த வாக்குத்தத்தம் முதல் சீடர்களுக்கு எவ்வாறு சொந்தமாகியிருந்ததோ அவ்வாறே இன்றும் நமக்குச் சொந்தமாகும். பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிப்பின் வார்த்தையைக் கேட்டவர்கள்மேல் உன்னத வல்லமையை தேவன் அருளியதுபோல இன்றும் ஆண்கள் மேலும் பெண்கள் மேலும் அருளுவார். அவருடைய ஆவியும் வல்லமையும் தேவைப்படுகிற அனைவருமே, அவருடைய வார்த்தையை அப்படியே நம்புகிற அனைவருமே இந்த வேளையில் அவற்றை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ளலாம். 118T, 20TamChS 327.1

    பரிசுத்த ஆவியானவர் குறித்த வாக்குறுதி இந்த வயதினருக்கு அல்லது இந்த இனத்தினருக்கு மட்டுமே என்று தேவன் வரையறுக்கவில்லை. ஆவியானவருடைய செல்வாக்கு தம்மைப் பின்பற்றுகிறவர்களோடு கடைசி மட்டும் இருக்குமென்று கிறிஸ்து சொன்னார். பெந்தெகொஸ்தே நாள்முதல் இன்றுவரையிலும், ஆண்டவருக்கும் அவருடைய சேவைக்கும் தங்களை முற்றிலும் ஒப்புக் கொடுத்துள்ள அனைவருக்கும் தேற்றரவாளன் அனுப்பப்பட்டிருக்கிறார். 1AA, 40TamChS 327.2

    பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையால் தம் மக்கள் புத்துணர்வு பெறுவதையும், தம் அன்பில் அவர்கள் மீண்டும் புதிதாக மூழ்குவதையும் தேவன் விரும்புகிறார். சபையில் பரிசுத்த ஆவியானவர் காணப்படாமல் இருக்கவே கூடாது. கிறிஸ்து பரலோகம் சென்றபிறகு, விசுவாசத்தோடு ஜெபித்து, காத்துக்கொண்டிருந்த சீடர்களின் இருதயத்தில் இடம்பிடிக்கிற வல்லமையோடும் பரிபூரணத்தோடும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அதுபோல, எதிர்காலத்தில், பூமி தேவ மகிமையின் வெளிச்சத்தால் பிரகாசிக்கப்படும். சத்தியத்தால் பரிசுத்தமான மக்களிடமிருந்த தெய்வீக செல்வாக்கு உலகில் செல்லும். கிருபையின் சூழலால் பூமி சூழப்படும். பரிசுத்த ஆவியானவர் தேவனுக்குரியவைகளை எடுத்து, அவற்றை மனிதர்களுக்குக் காண்பித்து, அவர்களுடைய இருதயங்களில் கிரியை செய்வார். 2SW, Sept. 5, 1905TamChS 328.1

    முடிவுகாலத்தில், இப்பூமியில் தேவபணி முடிவடைகிற சமயத்தில், பரிசுத்த ஆவியானவருடைய வழி நடத்துதலின் கீழாக அர்ப்பணிப்புமிக்க விசுவாசிகள் ஊழிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். தெய்வீக தயவின் விசேஷித்த அடையாளங்களும் வெளிப்படும். கிழக்கத்திய நாடுகளில் விதைப்பின் காலத்தில் முன்மாரியும், அறுப்பின்காலத்தில் பின்மாரியும் பொழியும்; அதை உருவகமாக வைத்து, தேவசபைமேல் ஆவிக்குரிய கிருபை ஊற்றப்படப் போவதுபற்றி எபிரெய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்துள்ளார்கள். அது நாம் நினைப்பதற்கும் பெரியதாக இருக்கும். அப்போஸ்தலர்களுடைய நாட்களில் ஆவியானவர் ஊற்றப்பட்டதுதான் முன்மாரியின் துவக்கம்; அதன் விளைவு மகிமையாக இருந்தது. முடிவு காலம்மட்டும், ஆவியானவரின் பிரசன்னம் மெய்யான சபையோடு தங்கியிருக்கும். 3AA, 54, 55TamChS 328.2

    அப்போஸ்தலர்களுடைய நாட்களில் ஆவியானவர் ஊற்றப் பட்டதுதான் ‘முன்மாரி’ என்று அழைக்கப்படுகிறது. அதனால் மகிமையான விளைவுகள் உண்டாயின. அதேபோல, பின்மாரியும் பரிபூரணமாகப் பொழியப்படும். இந்த நாட்களில் வாழ்கிறவர்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குத்தத்தம் என்ன? ‘நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.’ ‘ பின்மாரிக் காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப்பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். 18T, 21TamChS 328.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents