Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மேற்போக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவார்கள்

    சமாதானமும் செழிப்புமான காலத்தில் செய்யத்தவறிய ஊழியத்தை சபை ஒரு பயங்கரமான உபத்திரவ காலத்தில், மிகவும் சோர்வுண்டாக்குகின்ற. தடை செய்யப்படுகின்ற சூழ்நிலைகளின் கீழாக செய்ய வேண்டியிருக்கும். உலகப்பிரகாரமான சமரசம் அமைதிப்படுத்திவிட்ட அல்லது தடுத்து நிறுத்திவிட்ட எச்சரிப்புகள், விசுவாசத்தின் பகைஞர்களிடமிருந்து வரக்கூடிய மிகவும் கடுமையான எதிர்ப்பின் கீழாகக் கொடுக்கப்படவேண்டும். அந்த நேரத்தில், ஊழியத்தின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து தடங்கலை உண்டுபண்ணும் செல்வாக்கை உடையவர்களாயிருக்கின்ற, மேற்போக்கான, மாறுதல் விரும்பாத வகுப்பினர் (பழமைவாதிகள்) விசுவாசத்தை விட்டுவிடுவார்கள். — 5T 463 (1885).கச 126.7

    கர்த்தர் தமது ஜனங்களை ஆசீர்வதித்து, சாத்தானின் வஞ்சகங்களை இனங்கண்டுகொள்ள அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார் என்பதை அவன் காணும்போது, தனிச்சிறப்பு வாய்ந்த தனது வல்லமையை உபயோகப்படுத்தி, ஆத்துமாக்களின் அறுவடையில் ஒருபுறம் மதவெறியையும், மறுபுறம் உயிரற்ற சடங்குகளையும் கொண்டுவந்து, அநேகரைத் தன்பக்கமாக சேகரிக்கும்படி கிரியை செய்வான். — 2SM19 (1890).கச 127.1

    சத்தியத்தை அறிந்து விவேகமுள்ளவர்களாவதற்கு வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பெற்றிருந்தும், தேவன் நிறைவேற்றி முடித்திருக்கக்கூடிய வேலைக்கு எதிரிடையாகத் தொடர்ந்து வேலை செய்பவர்களை அவர் வெளியேற்றித் தூய்மைப்படுத்துவார். ஏனெனில், இரு மனதோடுள்ள ஆர்வத்துடன் ஊழியம் செய்கின்ற எந்த ஒரு மனிதனின் சேவையையும் தேவன் ஏற்பதில்லை. — Ms64, (1898).கச 127.2

    நம்மைச் சுற்றிலும் சோதனைகள் தீவிரமாகும்போது, பிரிவினைகளும் ஐக்கியமுமாகிய இரண்டுமே நமது அணிவரிசைகளில் காணப்படும் யுத்த ஆயுதங்களைக் கைகளில் எடுப்பதற்கு இப்பொழுது ஆயத்தமாயிருக்கும் சிலர், உண்மையான ஆபத்து வரும் நேரங்களில் திடமான கற்பாறையின்மீது தாங்கள் கட்டவில்லை என்பதை வெளிப்படுத்துவார்கள். அவர்கள், சோதனைகளுக்கு இணங்கிப்போய்விடுவார்கள். அதிக வெளிச்சத்தையும் அருமையான சலுகைகளையும் பெற்றிருந்த போதிலும் அதனை நன்கு பயன்படுத்திகொள்ளாததினால், ஏதாவது ஒரு அல்லது மற்றுமொரு சாக்குப்போக்கைச் சொல்லி, நம் மத்தியிலிருந்து பிரிந்து சென்றுவிடுவர். — 6T 400 (1900).கச 127.3