Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்தவனுடைய நோக்கங்கள்

    பலமிக்க நோக்கத்திட்டங்களும், மிகவும் வலிமைமிக்க ஏதுகரங்களும், சரியனவற்றை செய்வதற்கான மேலான பலங்களையும், பரலோகத்தின் மனமகிழ்ச்சியையும், தூதர்களின் சமுதாயத்தையும், தேவனோடும் அவரது குமாரனோடும் உள்ள அன்பையும் ஐக்கியத்தையும், நித்திய யுகங்கள் முழுவதுமாக நமது அனைத்து வல்லமைகளின் மேம்பாட்டையும் விரிவாக்கத்தையும் — ஒருபோதும் செயல்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது; இவைகளெல்லாம் நமது இருதயத்தின் அன்பான சேவையை, நமது சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய அன்பான ஆண்டவருக்கு கொடுப்பதற்கு, வல்லமையான தூண்டுதல்களும் ஊக்களிக்கும் செயல்களுமாக இல்லையா? — SC 21, 22 (1892).கச 209.2

    கிறிஸ்துவை சமாதானத்தோடு நாம் சிந்திக்கவும், இரட்சிக்கப்பட்டிருக்கவும், நித்தியத்திற்கும் இரட்சிக்கப்பட்டிருக்கவும் கூடுமானால், எல்லாரிலும் நாமே மிகவும் மகிழ்ச்சியான ஜீவிகளாயிருப்போம். ஓ! துன்மார்க்கரின் தொல்லையிலிருந்து ஓய்ந்து, களைத்துப்போனவர்கள் கடைசியாக வீடு போய்சேர்ந்து இளைப்பாறுவது எவ்வளவு நன்றாயிருக்கும்! — Letter 113, 1886.கச 209.3

    இந்த உலகத்தில், இயற்கையில் அழகாகக் காணப்படுகின்ற அனைத்தையும் நான் பார்க்க விரும்புகிறேன். ஒருவேளை பாவத்தின் சாபத்தால் இந்த பூமி கெடுக்கபடாமல் இருந்திருக்குமானால், தேவனுடைய நன்மையான அத்தனை காரியங்களுடன் சூழப்பட்டவனாக, இந்த உலகிலேயே நான் பூரண திருப்தி அடைந்திருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் நாம் புதிய வானங்களையும், ஒரு புதிய பூமியையும் பெற்றுக்கொள்வோம். இதனை யோவான் தனது பரிசுத்த தரிசனத்தில், “மேலும் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது, இதோ மனுஷர்களிடத்தில் தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன்தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளி. 21:3), என்று கூறுகின்றார். ஆ! என்ன ஆசீர்வாதமான நம்பிக்கை! என்ன மகிமையான எதிர்பார்ப்பு! Letter 62 1886.கச 209.4