Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அட்வென்டிஸ்ட்டுகள் இழிவாக நடத்தப்படுவர்

    கடந்துபோன யுகங்களிலே, தேவனுக்கு உண்மையாயிருந்தவர்களுக்கு எதிராக, திட்டம் தீட்டின தேர்ச்சிவாய்ந்த அதே சிந்தைதான் தேவனுக்குப் பயந்து அவரது பிரமாணத்திற்கு கீழ்ப்படிகின்றவர்களை, பூமியிலிருந்து அழித்துப்போட, இன்னமும் வகைதேடிக்கொண்டிருக்கின்றது...கச 107.2

    இகழ்ச்சியினால் அவர்களை மூடும்படியாக ஜசுவரியம், நுண்ணறிவு, கல்வி போன்றவைகள் ஒன்றிணையும். உபத்திரவப்படுத்துகின்ற அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் சபை அங்கத்தினர்கள் ஒன்றுகூடி அவர்களுக்கு விரோதமாக இரகசிய உடன்படிக்கைப் பண்ணுவார்கள். குரலாலும், எழுத்தாலும், தற்பெருமையான பேச்சுக்களாலும், ஏளனத்தாலும் மற்றும் அச்சுறுத்தல்களாலும், அவர்களது விசுவாசத்தை கவிழ்த்துப்போடும்படியாக அவர்கள் முயற்சிப்பார்கள். -5T 450 (1885).கச 107.3

    வேதாகம சத்தியத்திற்கு நமது ஆதரவை அளிப்பதினாலே, நாம் துரோகிகள் போன்று நடத்தப்படக்கூடிய ஒரு காலம் வரும். - 6T 394 (1900).கச 107.4

    வேதாகம ஓய்வுநாளைக் கனப்படுத்துபவர்கள், சட்டம் ஒழுங்கு ஆகியவைகளின் எதிரிகளைப்போன்று வெளிப்படையாகக் குற்றம் சுமத்தப்படுவர். அவர்கள் சமுதாயத்தின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை முறித்துப்போடுபவர்கள் என்றும், ஒழுக்கக் சீர்கேடுகளையும் நாட்டில் குழப்ப நிலையையும் உண்டுபண்ணுபவர்கள் என்றும், பூமியின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை வரவழைப்பவர்கள் என்றும் குற்றப்படுத்தப்படுவர். அவர்களது மனச்சாட்சியின் மனவுறுத்தல் வளைந்துகொடுக்காத பிடிவாதத்தன்மை என்றும், அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிற குணம் என்றும் கூறப்படும். அரசாங்கத்திடம் நன்மதிப்பில்லாதவர்கள் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டப்படுவர். — GC 592 (1911).கச 107.5

    அந்தத் தீங்கான நாளில், மனச்சாட்சியின் ஆளுகைக்கு ஏற்றவாறு பயமின்றி தேவனுக்கு சேவைசெய்யக்கூடிய அனைவருக்கும் தைரியமும், உறுதியும், தேவனையும் அவரது வார்த்தையையும் குறித்ததான ஒரு அறிவும் அவசியமாகும். ஏனெனில், தேவனுக்கு உண்மையாய் இருப்பவர்கள் உபத்திரவப்படுத்தப்படுவார்கள்; அவர்களது நோக்கங்கள் தவறென்று தர்க்கம் செய்யப்படும்; அவர்களது சிறந்த முயற்சிகள் தவறாகச் சித்தரிக்கப்படும்; அவர்களது பெயர்கள் தீமையாகக் கருதப்பட்டுத் தூக்கியெறியப்படும். — AA 431, 432 (1911).கச 107.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents