Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    6. மீதமானவர்களின் வாழ்க்கைமுறையும் செயல்பாடுகளுமம்

    சேவையும் தற்தியாகமும் செய்யும் சிந்தை

    ஒவ்வொருவரும் அவரவரது திறமைக்கு ஏற்ப தேவனுக்கு ஊழியஞ் செய்யும்படியாக, தொண்டு செய்கின்ற சிந்தையை சபை முழுதும் உண்மையாய்க் கொண்டிருக்கவேண்டும் என்று தேவன் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றார். தேவனுடைய சபையின் அங்கத்தினர்கள் நியமிக்கப் பட்ட தங்களது பொறுப்பை, இல்லம் மற்றும் வெளியிடங்கள் போன்ற தேவையுள்ள இடங்களில் செய்து, சுவிசேஷ அழைப்பை நிறைவேற்றும் பொழுது, இந்த முழு உலகமும் வெகுசீக்கிரத்தில் எச்சரிக்கப்பட்டுவிடும்; கர்த்தராகிய இயேசுவும் வெகுசீக்கிரத்தில் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் திரும்ப வந்திடுவார். — AA 111 (1911).கச 54.1

    தனிநபர் முயற்சிக்குப் பதிலாக, ஸ்தாபனங்கள் செய்துகொள்ளட்டும் என்னும் போக்கு எங்கணும் காணப்படுகிறது. மாபெரும் சபைகள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, ஒரு குடையின்கீழ் இயங்குதலே நலமென மனித ஞானம் எண்ணிக்கொள்கிறது. திரளான ஜனங்கள் இரக்க மனப்பான்மை கொண்ட செயல்கள் செய்வதை, ஸ்தாபனங்களிடமும் நிறுவனங்களிடமும் விட்டுவிடுகின்றனர். அவர்கள் உலகத்தாருடன் உள்ள தொடர்பைத் துண்டித்துக்கொள்ள, தாங்களே சாக்குபோக்குகள் சொல்லிக்கொள்கின்றார்கள். ஆதலால், அவர்களது இருதயம் உணர்வற்தாகிவிடுகின்றது. அவர்கள் தங்களது காரியங்களிலேயே மூழ்கிப் போனவர்களாகவும், உணர்த்தப்படக்கூடாதவர்களாகவும் மாறிவிடுகின்றனர். தேவனுக்கும் மனிதனுக்குமான அன்பு அவர்களது ஆத்துமாவிலிருந்து பட்டுப்போய்விடுகின்றது.கச 54.2

    ஒரு தனிப்பட்ட ஊழியத்தை — மற்றவரால் செய்யமுடியாத ஒரு ஊழியத்தை — கிறிஸ்து தனது பின்னடியார்களுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு ஊழியஞ் செய்வதும், தொலைந்துபோனவர்களுக்கு சுவிசேஷத்தை அளிக்கிறது மானகாரியங்கள் நிர்வாகத்திடமோ, ஒழுங்குபடுத்தப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமோ விட்டுவிடப்படக்கூடாது. தனிப்பட்ட பொறுப்பு, தனிப்பட்ட அக்கறை, தனிப்பட்ட முயற்சி, தனிப்பட்ட தியாகம் போன்றவைகள்தான் சுவிசேஷத்தின் தேவையாக இருக்கின்றன. — MH 147 (1905).கச 54.3