Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    15. தேவனுடைய முத்திரையும் மிருகத்தின் முத்திரையும்

    இரண்டு வகுப்பினர் மட்டுமே

    இரண்டு கூட்டத்தார் மட்டுமே அங்கு இருக்கமுடியும். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையினாலோ, அல்லது மிருகத்தின் சொரூபம் அல்லது மிருகத்தின் முத்திரையினாலோ, இந்த ஒவ்வொரு பிரிவினரும் தெளிவாக முத்திரையிடப்படுவர். - RH Jan. 30, 1900.கச 156.1

    விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் இடையே நடக்கின்ற மாபெரும் போராட்டத்திலே, கிறிஸ்தவ உலகம் முழுவதும் ஈடுபடும். அனைவரும் இதில் ஏதாவது ஒரு பக்கத்தைத் தெரிந்துகொள்வர். சிலர் இந்தப் போராட்டத்தின் எந்தப் பக்கத்துடனும் வெளிப்படையாக ஈடுபடாதிருக்கலாம். அவர்கள் சத்தியத்திற்கு விரோதமான பக்கத்தை தெரிந்தெடுக்காததுபோல காணப்படலாம். ஆயினும், நிந்தையை சகிக்கவோ அல்லது சொத்துக்களை இழக்கவோ பயப்படுவதால் அவர்கள் கிறிஸ்துவிற்காகத் தைரியமாக வெளியே வரமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்துவுக்கு எதிரிகளாகவே எண்ணப்பபடுவர். — RH Feb, 7, 1893.கச 156.2

    முடிவுகாலத்தை நாம் நெருங்கும்போது, ஒளியின் பிள்ளைகளுக்கும் இருளின் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கின்ற எல்லைக்கோடு மிகமிகத் தெளிவானதாக இருக்கும். அவர்கள் மிகவும் அதிகமாக, மாறுபட்ட நிலையில் இருப்பார்கள். இந்த வேறுபாடு, “மறுபிறப்பு” என்று, கிறிஸ்துவின் வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ளது — அதாவது கிறிஸ்துவுக்குள் புதிதாக சிருஷ்டிக்கப்படல், உலகத்திற்கு மரித்தல், தேவனுக்கென்று பிழைத்திருத்தல் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இவைகள்தான் பரலோகத்துக்கு உரியவர்களிலிருந்து பூலோகத்துக் குரியவர்களைப் பிரிக்கின்ற பிரிவினைச் சுவர்களாகும். இவைகளே உலகத்துக்குரியவர்கள் யாரென்றும், அதிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் யாரென்றும், அதாவது தேவனுடைய பார்வையில் அருமையானவர்களாய் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யாரென்றும், இவை இரண்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை விளக்கும். — Special Testimony to the Battle Creek Church (Ph 155) 3 (1882).கச 156.3