Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    7. நாட்டுப்புற வாழ்க்கை

    தெய்வீக இலட்சியம்

    தேவன் படைத்த அனைத்தும் பரிபூரண அழகுடன் இருந்தபோதிலும், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்படிக்கு பூமியின்மீது அவர் படைத்த எதுவுமே குறைபடுவதாய் காணப்படாதபோதிலும், தேவன் அவர்களுக்காக விசேஷமாக ஒரு தோட்டத்தை உண்டாக்கியதின் மூலமாக அவர் தமது மாபெரும் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்களது நேரத்தின் ஒரு பகுதி தோட்டத்தைப் பண்படுத்தும் மகிழ்ச்சியான வேலையிலே ஈடுபடுத்தப்படும்படியாகவும், அதன் மற்றொரு பகுதி தங்களைச் சந்திக்க வரும் தேவதூதர்களை வரவேற்று, அவர்கள் கற்பிக்கும் ஆலோசனைகளைக் கேட்டு, அதை மகிழ்ச்சியாகதியானம் செய்வதிலும் ஆக்கிரமிக்கப்படிருந்தது. அவர்களது வேலை சோர்வளிக்கக்கூடியதாய் இராமல், மகிழ்விக்கக்கூடியதாயும் பலத்தைக் கொடுக்கக்கூடியதாயும் இருந்தது. இந்த அழகான தோட்டம் அவர்களது வீடாகவும், அவர்களது விசேஷித்த உறைவிடமாகவும் இருந்தது. — 3SG 34 (1864).கச 69.1

    நித்திய பிதா தமது குமாரனுக்காக தெரிந்துகொண்ட சூழ்நிலைகள் என்ன? கலிலேயக் குன்றுகளிலே ஒரு தனிமையான இல்லம்; எளிமையான ஒரு வாழ்க்கை; கடுந்துன்பம் மற்றும் பாடுகளுடனான அனுதின போராட்டம்; தற்தியாகம், சிக்கனம் மற்றும் பொறுமையுடன் கூடிய மகிழ்ச்சிமிக்க சேவை; திறந்த வேதாகமச் சுருளுடன் தன்னுடையதாயின் அருகில் அமர்ந்து கற்றுக்கொள்ள செவழிக்கின்ற நேரம்; பசுமையான பள்ளத்தாக்கில் அமைதலான அருணோதயம் அல்லது அஸ்தமனம்; இயற்கையின் பரிசுத்தமான ஊழியங்கள்; சிருஷ்டிப்பையும் தேவனுடைய வழிநடத்துதலையும் பற்றின பாடங்கள் மற்றும் தேவனோடு ஆத்துமாவின் ஐக்கிய உறவு — இவைகளே இயேசு கிறிஸ்துவின் ஆரம்பகால வாழ்க்கையின் சூழ்நிலைகளும் வாய்ப்புகளுமாக இருந்தன. — MH 365, 366 (1905).கச 69.2