Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    எதிர்ப்பைக் காட்டாதிருங்கள்

    நமது திருச்சபைகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாயிராவிட்டால், சினமடைவதற்கு வழிநடத்துகிற குணக்கூறுகளை உடையவர்களாயிருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்வதற்கான அவர்களது சுதந்திரம் எடுத்துப்போடப்பட்டது என்று திரித்துக் கூறுவதைன்மூலம் அவர்களுக்கு சினமூட்டப்படலாம். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு தீவிர உணர்ச்சிக்குள்ளாக பறக்கவேண்டாம். மாறாக, எல்லாவற்றையும் ஜெபத்திலே தேவனிடம் எடுத்துச்செல்லுங்கள். ஆட்சியாளர்களின் வல்லமையை அவர் மாதிதிரமே தடுக்க முடியும். எந்தவொரு முன்யோசனையுமின்றி நடந்துகொள்ள வேண்டாம். ஒருவரும் தங்களது சுதந்திரத்தை துர்க்குணத்திற்கு மூடலாக பயன்படுத்தாதபடி, அதைக் குறித்து ஞானமில்லாமல் பெருமைபாராட்டவேண்டாம். மாறாக, தேவனுடைய ஊழியக்காரரைப்போல, “எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்தி ருங்கள். ராஜாவைக் கனம்பண்ணுங்கள்” (1 பேதுரு 2:17).கச 100.5

    இந்த ஆலோசனை, நெருக்கடியான சூழ்நிலைகளுக்குள் கொண்டு வரப்பட இருக்கின்ற அனைவருக்கும் உண்மையிலேயே மிகவும் அவசியமானதாகும். எதிர்ப்பை வெளிப்படுத்துகிற அல்லது தீமையானது எனப் பொருள்கொள்ளக்கூடிய அளவில் எக்காரியமும் காட்டப்படக் கூடாது. — 2MR 193, 194 (1898)கச 101.1