Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவன் ஆயத்தஞ்செய்வார்

    இக்கட்டுக்காலத்திலே நம்முடைய தற்காலிகத் தேவைகளுக்கென்று முன்னேற்பாடாக ஆயத்தம் செய்துவைப்பதென்பது, வேதத்திற்கு எதிரிடையான காரியம் என்பதைக் கர்த்தர் எனக்கு மீண்டும் மீண்டுமாகக் காண்பித்திருக்கின்றார். பரிசுத்தவான்கள் ஒருவேளை இக்கட்டுக்காலத்திலே அப்படித் தங்களுக்கு ஆகாரம் சேர்த்து வைத்திருப்பார்களானால், அல்லது அறுவடை செய்யப்படாமல் வயலில் விட்டிருப்பார்களானால், பட்டயமும் பஞ்சமும் வாதைகளும் நாட்டிலே பரவியிருக்கும்போது, வன்முறையாளர்களின் கரங்களால் அவைகள் அவர்களிடமிருந்து பிடுங்கப்படும்.அந்நியர் அவர்களது நிலங்களை அறுவடை செய்து கொண்டுசெல்வார்கள் என்பதை நான் கண்டேன்.கச 193.4

    அந்த நேரம்தான் நமக்கு தேவனை முழுமையாக நம்புவதற்கான நேரம். அவரே நம்மை ஆதரிப்பார். அந்நேரத்திலே அப்பமும் தண்ணீரும் நமக்கு நிச்சயமாகக் கொடுக்கப்படும் என்றும், நாம் குறைவுபடவோ பசியினால் வருந்தவோ மாட்டோம் என்றும் நான் கண்டேன். ஏனெனில், வனாந்தரத்திலேயும் நமக்காகப் பந்தியை ஆயத்தம்பண்ண தேவன் வல்லமையுள்ளவராய் இருக்கின்றார். எலியாவைப் போஷித்ததுபோல், அவசியமிருந்தால் காகங்களை அன்னுப்பி அவர் நம்மையும் போஷிப்பார். அல்லது இஸ்ரவேலருக்கு வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்தது போலவும் பொழியச்செய்வார்.- GC 56 (1851).கச 193.5

    அப்பத்தையும் தண்ணீரையும் மட்டுமே நம்பி வாழக்கூடிய நிர்பந்தம் தேவனுடைய மக்களாய்க் கட்டாயப்படுத்தும் ஒரு இக்கட்டுக்காலம் நமக்கு முன்பாக வந்திருக்கும் என்பதை நான் கண்டேன்… ஏனெனில் இக்கட்டுக்காலத்திலே ஒருவரும் தங்கள் கைகளினால் வேலை செய்யமாட்டார்கள். அவர்களது பாடுகள் மனரீதியானதாக இருக்கும். மேலும், தேவன் தாமே அவர்களுக்கு உணவளிப்பார். — Ms 2,1858.கச 194.1

    இக்கட்டுக்காலம் நமக்குச் சற்று முன்பாக இருக்கின்றது. சுயத்தை மறுப்பதற்கும் உயிர்பிழைப்பதற்கும் மாத்திரம் போதுமான அளவு புசிக்கவேண்டிய கண்டிப்பான தேவை தேவனுடைய ஜனங்களுக்கு உண்டாகும். ஆனாலும் தேவன் அப்படிப்பட்ட காலத்திற்கென்று நம்மை ஆயத்தப்படுத்துவார். அந்த பயங்கரமான மணிவேளையில், நம்முடைய சூழ்நிலை தேவன் தமது பெலப்படுத்தும் வல்லமையை அளிப்பதற்கும், தமது மக்களை தாங்குவதற்குமான அவரின் சந்தர்ப்பமாக இருக்கும். — 1T 206 (1859).கச 194.2

    இக்கட்டுக்காலத்தில் மீதமான தேவ ஜனத்துக்கு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதெல்லாம் அப்பமும் தண்ணீருமே. — SR 129 (1870).கச 194.3

    கிறிஸ்துவின் வருகைக்குச் சற்றுமுன்பாக இருக்கின்ற இக்கட்டுக்காலத்தில், பரலோகத் தூதர்களுடைய ஊழியத்தின் மூலமாக நீதிமான்கள் பாதுகாக்கப்படுவார்கள்.- PP 256 (1890).கச 194.4