Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    1844 - க்குப் பின்பு கால தீர்க்கதரிசனம் இல்லை

    இந்த கொள்கைத் தீவிரவாதமுடைய குழுக்கள், ஆத்துமாக்களின் எதிராளியானவனுடைய பணியைச் செய்து கொண்டிருந்தன என்று, ஜாக்சன் பட்டண முகாம் கூட்டத்தில் நான் தெளிவாய்க் குறிப்பிட்டேன். அவர்கள் இருளில் இருந்தனர்; கிருபையின் காலம் அக்டோபர் 1884-ல் முடிவடையும் என்ற மாபெரும் வெளிச்சத்தைப் பெற்றிருப்பதாக உரிமை பாராட்டிக்கொண்டனர். 1884 முதல் தேவனால் கொடுக்கப்பட்ட தூதில், குறிப்பிட்ட காலம் குறித்து (கால தீர்க்கதரிசனம் குறித்து) ஒன்றும் கிடையாது என்று கர்த்தர் எனக்குக் காண்பிக்கப் பிரியப்பட்டிருந்தார் என்பதை பகிரங்கமாக அங்கேயே நான் குறிப்பிட்டேன். - 2SM 73 (1885).கச 24.5

    1844-ல் தீர்க்கதரிசன கால கட்டங்களின் முடிவிற்கும், நமது கர்த்தருடைய வருகையின் நேரத்திற்கும் இடையில், எந்த ஒரு கால நிர்ணய அறிவிப்பும் இடைபடாதபடிக்கு, காத்திருப்பதும் விழித்திருப்பதுமே, நமது நிலைப்பாடாக இருந்துகொண்டிருக்கின்றது. - 10MR 270 (1888).கச 25.1

    குறிப்பிட்ட காலத்தைக்குறித்த வேறொரு தூது ஜனங்களுக்கு இராது. 1842-ல் தொடங்கி 1844 வரையுள்ள இந்த கால கட்டத்திற்குப் பிற்பாடு, (வெளி. 10:4-6) எந்த ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசன கால அளவும் இருக்கவியலாது. மிக நீண்ட காலக் கணக்கீடு. 1844-ன் இலையுதிர்க் காலத்துடன் முடிவடைகின்றது. - 7BC 971 (1900).கச 25.2