Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நடைமுறைக்கு உகந்த இரக்க மனப்பான்மையின் முக்கியத்துவம்

    நமது நடைமுறைக்கு உகந்த இரக்க மனப்பான்மையைப் பொறுத்தே, கடைசி நாளின் தீர்மானங்கள் அமைவிருக்கின்றன. அன்புடன் செய்யப்பட்ட அனைத்து நன்மையான செயலையும், தமக்கே செய்யப்பட்டதுபோல கிறிஸ்து அங்கீகரிக்கின்றார். TM 400 (1896).கச 158.4

    நாடுகள் அனைத்தும் தேவனுக்கு முன்பாக ஒன்றுதிரட்டப்படும் போது, அங்கே இரண்டே இரண்டு பிரிவுகள்தான் இருக்கும். ஏழைகள் மற்றும் துன்பப்படுகின்றவர்களின் உருவத்திலிருக்கும் அவருக்கு (இயேசுவிற்கு), அவர்கள் எதைச் செய்தார்களோ அல்லது எதைச் செய்யாமல் புறக்கணித்தார்களோ, அதை வைத்து அவர்களுடைய நித்திய முடிவு தீர்மானிக்கப்படும்...கச 158.5

    புறஜாதிகள் மத்தியிலும்கூட அரியாமலே ஆண்டவரைத் தொழுது கொள்பவர்களும், மனித ஏதுகரங்களின்மூலமாக சத்திய வெளிச்சம் ஒருபோதும் கிடைக்கப்பெற்றிராதவர்களும் இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் அழிந்துபோகமாட்டார்கள். எழுதப்பட்டிருந்த தேவனுடைய பிரமாணத்தைக்குறித்து அறிவில்லாதவர்களாக இருந்தபோதும், இயற்கையின் வழியாக அவர்களிடத்தில் பேசிய ஆண்டவரின் சத்தத்தை அவர்கள் கேட்டிருக்கின்றனர், பிரமாணம் எதை எதிர்பார்த்ததோ அதற்கு கீழ்ப்படிந்திருக்கின்றனர், அவர்களுடைய கிரியைகள் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இருதயங்களைத் தொட்டிருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. மேலும் அவர்கள், தேவனுடைய பிள்ளைகளாக இனங்கண்டுகொள்ளப்பட்டிருக்கின்றனர்.கச 158.6

    ஜாதிகளுக்கு மத்தியிலும் அஞ்ஞானிகளுக்கு மத்தியிலும் உள்ள எளிமையானவர்கள். இரட்சகரின் உதடுகளிலிருந்து கூறப்பட்ட, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்ற வார்த்தையைக் கேட்பதற்கு, எப்படிப்பட்ட ஆச்சிரியமும் மகிழ்ச்சியும் பெற்றவர்களாக இருப்பார்கள்! எல்லையற்ற அன்பை உடையவரின் அங்கீகாரமான வார்த்தைகளை, அவரது பின்னடியார்கள் ஆச்சரியத்துனும் மகிழ்ச்சியுடனும் நோக்கிப்பார்க்கும்போது, அவரது இருதயம் எவ்வித மகிழ்ச்சியுடையதாக இருக்கும்! — DA 637, 638 (1898).கச 159.1