Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    நான்காவது வாதை

    அடுத்து பின்தொடர்ந்த வாதையில், “தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி” சூரியனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. “அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்படுவார்கள்” (வெளி. 16:8,9). இந்த பயங்கரமான நேரத்தில் பூமியின் நிலையை தீர்க்கதரிசிகள்: “பூமி துக்கங்கொண்டாடுகிறது… ஏனென்றால் வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று… வயல்வெளியின் மரங்களெல்லாம் வடிபோயின: ஏனென்றால் சந்தோஷம் மனுபுத்திரரை விட்டு ஒழிந்துபோயிற்று.” “விதையானது, மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று. பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்து போயின… மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது! மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது… நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று. அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.” “அந்நாளிலே தேவாலயப் பாட்டுகள் அலறுதலாக மாறும் எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (யோவேல் 1:10-12, 17- 20; ஆமோஸ் 8:3) என்று விளக்குகிறார்கள்… இந்த வாதைகள் உலளாவியதாயில்லை. அப்படியிருந்தால் பூமியின் குடிகள் அனைவரும் அழிந்துபோவார்கள். என்றாலும், இதுவரையிலும் மனிதர்கள் அறிந்திராத, மிகவும் பயங்கரமான கொள்ளைநோய்களாக அவைகள் இருக்கும்.- GC 628, 629 (1911).கச 179.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents