Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    புராட்டஸ்டண்ட் மார்க்கமும் கத்தோலிக்கமும் இணைந்து செயல்படுதல்

    புராட்டஸ்டண்ட் மார்க்கம் ரோம வல்லமைக்கு நேராகத் தனது ஐக்கியத்தின் கரத்தை நீட்டும். அப்போது தேவனுடைய சிருஷ்டிப்பின் ஓய்வுநாளுக்கு விரோதமாக ஒரு சட்டமியற்றப்படும். அதன் பிறகு தேவன் தமது “அபூர்வமான கிரியை” யை பூமியிலே நடப்பிப்பார். — 7BC 910 (1886).கச 95.2

    விக்கிரகாராதனை என்ற குற்றச்சாட்டிலிருந்து ரோம சபை எப்படித்தன்னை விடுவித்துக்கொள்ளும் என்பதை நம்மால் காண முடியாது… முடிவினிலே தங்களோடு ஒருங்கிணையக்கூடிய இப்படிப்பட்ட மதத்தைத்தான் புராட்டஸ்டண்ட் சபையார் பரிவுடன் நோக்கிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆயினும் இநந்த ஒருங்கிணைப்பு கத்தோலிக் கத்தில் ஏற்படுத்தப்படும் ஒரு மாறுதலினால் உண்டாக்கப்பட்டதல்ல, ஏனென்றால் ரோம் ஒருபோதும் மாறுவதில்லை. அவள் (ரோம்) தவறிழைக்காத தன்மையை உரிமை பாராட்டுகின்றாள். புராட்டஸ்டண்ட் மார்க்கம் தான் மாறக்கூடியதாகும். தனது பங்காக அது (புராட்டஸ்டண்ட்) கையாளுகின்ற தாராளக் கொள்கைகள்தான், கத்தோலிக்கத்தின் கரத்தைப் பற்றிக்கொள்ளவேண்டிய இடத்திற்கு அதனைக் கொண்டுவரும். — RH June 1, 1886.கச 95.3

    தாங்கள்தான் புராட்டஸ்டண்டுகள் என்று வெளிப்படையாக உரிமை பாராட்டிக்கொள்ளும் புராட்டஸ்டண்ட் உலகம், பாவ மனுஷனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளும். அப்போது, சபையும் உலகமும் சீர்கேடான ஐக்கியத்திற்குள்ளாக இருக்கும். — 7BC 975 (1891).கச 95.4

    முந்தின உலகத்தின் ரோம மார்க்கமும், இன்றைய உலகத்தின் மருளவிழுந்த புராட்டஸ்டண்ட் மார்க்கமும் தெய்வீகக் கட்டளைகள் அனைத்தையும் கனப்படுத்துகிறவர்களுக்கு எதிராக ஒரே விதமான காரியத்தையே நடப்பிக்கும். — GC 616 (1911).கச 95.5