Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வானத்திலிருந்து அக்கினி

    மனிதர்களின் உரிமைகோருதல்களை நாம் நம்பக்கூடாது. கிறிஸ்து செய்துகாட்டியதுபோலவே, வியாதியஸ்தர்களை குணமாக்குவதில் தாங்கள் அற்புதங்கள் செய்கிறதாக அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். மனிதர்களின் கண்களுக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியைக்கூட வரவழைக்கப்போகின்ற இந்த அதிசயத்தில், மாய வித்தைக்காரனாகிய பெரிய வஞ்சகனைத் தங்கள் பின்னால் வைத்துக்கொண்டு இந்த ஜனங்கள் செய்வதில் ஆச்சிரியம் என்ன இருக்கின்றது? - 2SM 49 (1887).கச 121.5

    பிசாசின் இந்தப் பொய் அற்புதங்களே உலகம் முழுவதையும் சிறைபிடிக்கப்போகின்றன. மனிதனின் கண்களுக்கு முன்பாக, வானத்திலிருந்து அக்கினியையும் அவன் வரச்செய்வான். அற்புதங்களை அவன் செய்யவிருக்கின்றான். இந்த ஆச்சரியமான அற்புதங்கள் செய்யும் அவனுடைய வல்லமை முழு உலகையும் அவன் பக்கமாகத் துடைத்து எடுத்துச்செல்லும் வல்லமையாகும். — 2SM 51 (1890).கச 121.6

    கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக சாத்தான் வருவான். தன்னை கிறிஸ்து என்று உரிமை கோருவான். அப்படியாகச் சொல்லி, தன்னை மாபெரும் மருத்துவ ஊழியக்காரனாகக் காண்பித்துக்கொண்டு அவன் உள்ளே வருவான். தன்னை தேவனென்று நிரூபிக்கும்படியாக, அவன் வானத்திலிருந்து அக்கினியை வரும்படி செய்வான். — MM87, 88 (1903).கச 122.1

    விசுவாசத்திலிருந்து விலகிப்போன தனது பிரதிநிதிகள் மூலமாக, சத்துரு கிரியை செய்வான் என்று வேதவாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு முன்பாக, வானத்திலிருந்து அக்கினியைக்கூட வரவழைக்கத்தக்கதான அற்புதத்தை மனிதர் காணும்படியாக செய்வார்கள். — 2SM 54 (1907).கச 122.2

    “அன்றியும் அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து (வெளி. 13:13,14). இங்கு வெறும் ஏமாற்றுவேலைகளைப்பற்றி மாத்திரம் முன்னறிவிக்கப்படவில்லை. மனிதர்களால் செய்யப்படும் அற்புதங்களினால் அல்லாமல், சாத்தானின் பிரதிநிதிகளால் செய்யப்படும் அற்புதங்களினாலேயே மனிதர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். — GC 553 (1911).கச 122.3