Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஸ்தாபனம் என்பது எப்பொழுதும் அத்தியாவசியமானதே

    சபைகள் ஒழுங்கினைக் கடைபிடித்து, அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் முறைப்படுத்தபடவில்லையெனில், எதிர்காலத்தைக் குறித்து நம்புவதற்கான ஒன்றும் அவைகளுக்கு இருக்காது. - 1T 270 (1862).கச 32.4

    போலியான புரட்சிகளைத் தடுப்பதற்கும், தேவனுடைய வார்த்தையால் அங்கீகரிக்கப்படாத உரிமைகோருதல்களை தவறென்று நிரூபிப்பதற்கும், மாபெரும் வல்லமையாக விளங்கக்கூடிய ஒரு முழுமையான ஸ்தாபனம் அத்தியாவசியப்படுகின்ற வேளையில், இந்த ஜனங்களிடையே உட்புகுந்து, ஊழியத்தை சீக்குலைகின்றன தனது முயற்சிகளில் சாத்தான் வெற்றி பெறுவானானால் ஆ! அவன் எவ்வளவாய் மகிழ்ச்சியடவான்! ஞானமாகவும் ஜாக்கிரதையான ஊழைப்பாலும், உருவாக்கப்பட்டிருக்கின்ற ஸ்தாபனத்தின் அமைப்பும் ஒழுங்கும் உருக்குலைந்துபோகாதபடிக்கு, அவன் கயிறுகளை நாம் சரியான அளவில் பிடித்திருக்கவேண்டியது அவசியமாயிருக்கின்றது. இப்போதைய காலத்திற்குரிய ஊழியத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வாஞசிக்கின்ற ஒழுங்கற்ற சக்திகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது.கச 33.1

    முடிவு காலத்தை நாம் நெருங்கும் வேளையில், ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் மதம்சார்ந்த எந்த ஸ்தாபனத்தையும் சாராமல் தன்னிச்சையாகச் செயல்படுவார்கள் என்ற கருத்தை சிலர் பரப்பியிருக்கின்றனர். ஆயினும், ஒவ்வொரு மனிதனும் தன்னிச்சையாகச் செயல்படுதல் என்னும் அப்படிப்பட்ட ஒரு காரியம், இந்தப் பணியில் கிடையாது என்று கர்த்தரால் நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றேன். 2மே 30, 1909 அன்று , வாஷிங்டன் D.C. யில். நடைபெற்ற ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தில், பிரதிநிதிகளுக்கு முன்பாக Manuscript - லிருந்து வாசிக்கப்பட்டது. - 9T 257, 258 (1909).கச 33.2

    கடைசி நெருக்கடியை நாம் நெருங்கும்போது, செயலில் ஒத்திசைவு மற்றும் ஒழுங்கு காணப்பட வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவதற்குப் பதிலாக, இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகவும் ஒழுங்கும் சிரமுமாக நாம் காணப்பட வேண்டும். - 3SM 26 (1892).கச 33.3