Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய கடைசி எச்சரிப்பின் செய்தி

    தீர்க்கதரிசன வரிசையில், வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரத்தின் தூதுகளுக்கான இடத்தை தேவன் கொடுத்திருக்கின்றார். அவைகளின் பணி, இந்த பூமிக்குரிய சரித்திரத்தின் முடிவுமட்டும் நிறுத்தப்பட மாட்டாது. — EGW’ 88 804 (1890)கச 144.4

    வெளி. 14:6-112-ல் உள்ள மும்மடங்கான எச்சரிப்பை நிராகரிப்பதின் விளைவாக, இரண்டாம் தூதனால் முன்னறிவிக்கப்பட்ட நிலையை சபை முழுமையாக அடைந்திருக்கும்போது, இன்னும் பாபிலோனிலுள்ள தேவனுடைய ஜனங்கள் அவளுடனுள்ள தொடர்பைவிட்டுப் பிரிந்து வரும்படி அழைக்கப்படுவார்கள் என்ற நேரத்தைக் குறித்து வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரம் சுட்டிக்காட்டுகின்றது. எப்போழுதும் உகலத்திற்கு கொடுக்கப்படவேண்டிய தூதுகளில் இந்த தூதே கடைசியானதாக இருக்கின்றது. — GC 390 (1911).கச 144.5

    “இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று... பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” (வெளி. 18:1,2,4) என்று கூறினான். வெளி. 14:8-ல் உள்ள இரண்டாம் தூதனால் அறிவிக்கப்பட்டபடி, பாபிலோனின் விழுகையைப் பற்றிய அறிவிப்பு மீண்டுமாகக் கொடுக்கப்படவேண்டிய எதிர்நோக்கியுள்ள ஒரு காலத்தையே இந்த வேதவாக்கியம் சுட்டிக்காட்டுகின்றது. அதனோடு சேர்த்து, 1844-ம் வருடத்தின் கோடைகாலத்தில் அந்தத் தூது முதலாவதாகக் கொடுக்கப்பட்டதிலிருந்து, பாபிலோனை இணைந்து உருவாக்கும் பல்வேறு அமைப்புகளுக்குள் நுழைந்திருக்கக்கூடிய அக்கிரமங்களைக்குறித்தும் இது தெரிவிக்கின்றது... இத்தகைய அறிவிப்புகள் மூன்றாம் தூதனின் தூதுடன் இணைந்து, பூமியின் குடிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய கடைசி எச்சரிப்பை உருவாக்குகின்றது...கச 144.6

    பாபிலோனின் பாவங்கள் வெட்டவெளிச்சமாக்கப்படும். சபையின் பாரம்பரியங்களை அரசாங்கத்தின் துணையோடு வலியுறுத்து வதால் உண்டாகும் பயங்கரமான விளைவுகள், ஆவிமார்க்கத்தின் திடீர் பிரவேசம், போப்புமார்க்க அதிகாரத்தின் இரகசியமான ஆனால் அதிவேகமான வளர்ச்சி — அனைத்தின் முகமூடியும் அகற்றப்படும். இத்தகைய பக்திவிநயமான எச்சரிப்புகளால் ஜனங்கள் அசைக்கப்படுவார்கள். இது போன்ற வார்த்தைகளை ஒருபோதும் கேட்டிராத ஆயிரமாயிரம் பேர் கவனித்துக் கேட்பார்கள். — GC 603, 604, 606 (1911).கச 145.1