Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேசிய ஞாயிறு ஆசரிப்புச் சட்டம் என்றால் தேசிய மருளவிழுகை என்று பொருள்

    சட்டமியற்றுபவர்கள், பொதுமக்களிடையே மதிப்பையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும்படியாக, ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்திற்கான கோரிக்கைக்கு இணங்ககுவார்கள்… தேவனுடைய பிரமாணத்தின் மீறுதலாக, போப்பு மார்க்கத்தின் அமைப்பை சட்டத்தின்மூலம் நடைமுறைப்படுத்துவதிலே, நமது நாடு (USA) நீதியின்று முற்றிலுமாகத் தனது தொடர்பைத் துண்டித்துக்கொள்ளும்..கச 97.1

    எருசலேமிற்கு வரப்போகின்ற அழிவைச் சுட்டிக்காட்டத்தக்கதாக, ரோம சேனை எருசலேமை நெருங்கிவரும் சம்பவம் சீடர்களுக்கு ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப்போன்று, தேவனுடைய பொறுமை எல்லையை எட்டிவிட்டது என்பதை இந்த மருளவிழுகை ஒரு அடையாளமாக நமக்குக் காட்டுகிறது. — 5T 451 (1885).கச 97.2

    வாரத்தின் முதலாம் நாளை பரிசுத்த ஓய்வுநாளாக ஆசரிக்கமாட்டோம் என்று நாம் உறுதியான ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். ஏனெனில் அது யேகோவா தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட நாளல்ல. ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்தமாக ஆசரிப்பதின்மூலம், நம்மை நாமே மாபெரும் வஞ்சகனின் பக்கத்தில் வைத்துக்கொள்கின்றோம்…கச 97.3

    தேவனுடைய பிரமாணம் பயனற்றதாய் ஆக்கப்படும்போதும், மருளவிழுகை ஒரு நாடுதழுவிய பாவமாக மாறும்போதும், கர்த்தர் தமது ஜனங்கள் சார்பாகக் கிரியைசெய்வார். — 3SM 388 (1889).கச 97.4

    அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் தயவுபெற்ற மக்களாவர். ஆனால் அவர்கள், மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, புராட்டஸ்டண்ட் கொள்கைகளை விட்டுக்கொடுத்து, போப்பு மார்க்கத்தின் உடன்பாட்டைத் தெரிவிக்கும்போது, அவர்களது அக்கிரமத்தின் அளவு நிறைவை அடையும். அப்போது, “நாடுதழுவிய மருளவிழுகை” பரலோகத்தின் புத்தகங்களிலே பதிவு செய்யப்படும். — RH May 2, 1893.கச 97.5