Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குற்றமும், பஞ்சங்களும், கொள்ளை நோயும்

    காற்று மண்டலத்தில் சாத்தான் கிரியை செய்துகொண்டிருக்கின்றான். காற்றுமண்டலத்தை அவன் விஷமாக்கிக் கொண்டிருக்கின்றான். ஆதலால், இங்கே நமது நிகழ்கால மற்றும் நித்தியகால வாழ்க்கைக்காக நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நாம் இருக்கக்கூடிய இந்த நிலையில் மிகவும் விழிப்புடன் இருந்து தேவனுக்கென்று முற்றிலும் பக்திகொண்டு, முற்றிலும் மனந்திரும்பி, முற்றிலும் ஒப்படைத்திருக்கவேண்டும். ஆனால் நாமோ, வாத நோய் தாக்கப்பட்டு அமர்ந்திருப்பவர்கள் போலக் காணப்படுகின்றோம். பரலோகத்தின் தேவனே, எங்களை எழுப்பிவிடும்! - 2SM 52 (1890).கச 18.4

    ஜீவனுக்கும் ஊட்டச்சத்துக்குமான ஆதாரங்க்களில் ஒன்றான காற்றைப் பாழ்ப்படுத்தி, நச்சுக்கல்ந்த காற்றாகச் செய்கின்ற அந்தகார சக்திகள், தங்களின் நாசகார வேலையை முன்னேற்றிச் செல்லவிடாதபடி, தேவன் அவைகளைத் தடைசெய்யவில்லை. தாவர வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, மனிதனும் கொள்ளைநோயால் பாடுபட்டுவருகின்றான்... இவைகளெல்லாம், தேவனுடைய கோபாக்கினையின்3தேவன் தாம் அனுமதிப்பவைகளுக்கும் அல்லது தடை செய்யாதவைகளுக்கும் தாமே பொறுப்பெடுத்துக் கொள்கின்றார். பார்க்க: யாத். 7:3; 8:32; 1 நாளா. 10:4, 13, 14. பாத்திரங்களிலிருந்து விழும் துளிகளாக, பூமியின்மீது தெளிக்கப்படுகின்றதால் ஏற்படும் விளைவுகளே ஆகும். ஆயினும் இவைகள், வெகுசீக்கிரத்தில் நிகழப்போகின்றவைகளுக்கு நிழலாட்டமான பிரதிபலிப்பாய் இருக்கின்றன. - 3SM 391 (1891).கச 18.5

    பஞ்சங்கள் அதிகரிக்கும். கொள்ளைனோய்கள், ஆயிரக்கணக்கானவர்களை வாரிக்கொண்டுபோகும். வெளியிலிருந்து வரும் வல்லமைகளினாலும், உள்ளிருந்து செயல்படும் சாத்தானின் கிரியைகளினாலும், நம் அனைவரைச் சுற்றிலும் ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆயினும், தேவனுடைய தடுத்தாட்கொள்ளும் வல்லமை இப்பொழுது கிரியை செய்துகொண்டிருக்கின்றது.-19MR 382(1897).கச 19.1

    பூமியிலிருந்து கர்த்தருடைய ஆவியானவர் எடுத்துக்கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பது எனக்குக் காட்டப்பட்டது. தேவனுடைய கற்பனைகளைத் தொடர்ந்து அவமதிக்கும் அனைவருக்கும், அவரது காக்கும் வல்லமை சீக்கிரமாக மறுக்கப்பட்டுவிடும். ஏமாற்றிச் செய்யும் வியாபாரங்கள், கொலைகள் மற்றும் சகல விதமான குற்றங்களைப்பற்றிய செய்திகள் நம்க்கு நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. அக்கிரமம் என்பது ஒரு காலத்தில் உணர்வுகளை அதிர்ச்சியடையச் செய்கின்றதாக இருந்தாலும், இப்பொழுது ஒரு சர்வசாதாரணமான காரியமாக மாறிக்கொண்டிருக்கின்றது. - Letter 258, 1907.கச 19.2