Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஞாயிறு ஆசரிப்பு கட்டாயமாக்கப்படுவது ஒரு சோதனையாகும்

    வெளிச்சத்தைப் பெற்றிருந்து, நான்காம் கற்பனையைக் கடமையுணர்வாக அவர்கள் காணும்வரைக்கும், யாதொருவரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டார்கள். ஆனால் போலியான ஓய்வுநாளை வலியுறுத்தும் சட்டம் பிறப்பிக்கப்படும்பொழுதும், மூன்றாம் தூதனின் உரத்த சத்தம் மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவதற்கு எதிராக மக்களை எச்சரிக்கும்பொழுதும், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலுள்ள கோடு தெளிவாக வரையப்படும். அப்போது இன்னமும் மீறுதலில் தொடர்ந்து நிலைத்திருப்பவர்கள், மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள். — EV 234, 235 (1899).கச 163.3

    ஞாயிறு ஆசரிப்பு சட்டத்தின்மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் பொழுது, உண்மையான ஓய்வுநாள்பற்றிய கடமை உணர்வைக் குறித்து உலகம் தெளிவாக அறிந்துகொள்ளும். ரோமைவிட வேறு எந்த உயர்மட்ட அதிகாரத்தையும் பெற்றிராத ஒரு சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, எவர் ஒருவர் தேவனுடைய கட்டளைகளை மீறுவாரோ அவர் தேவனுக்கும் மேலாக போப்பு மார்க்கத்தைக் கனம்பண்ணுவார். அந்த நபர், ரோமுக்கும் ரோம சபையால் நியமிக்கப்பட்ட அமைப்பை (ஞாயிறு ஆசரிப்பு) வலியுறுத்துகிற வல்லமைக்கும் மரியாதை செலுத்துகின்றார். அவர், மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகின்றார்.கச 163.4

    தமது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கவேண்டும் என்று தேவன் அறிவித்துள்ள அமைப்பை (ஏழாம்நாள் ஓய்வுநாள்) உதறித்தள்ளிவிட்டு, அதற்குப் பதிலாக ரோமாபுரி தனது மிக உயர்ந்த அதிகாரத்திற்கு அடையாளமாகத் தெரிந்துகொண்ட நாளை மனிதர்கள் கனப்படுத்தும் பொழுது, அதன்மூலம் அவர்கள் ரோமாபுரிக்கு உண்மையாக இருப்பதின் அடையாளமாகிய — “மிருகத்தின் முத்திரை” யை ஏற்றுக்கொள்ளுகின்றனர். இந்தக் காரியம் மக்களுக்கு முன்பாக இவ்வாறு தெளிவாக கச 163.5

    வைக்கப்படும்வரை அது முக்கியக் காரியமாக இருக்காது. மேலும் அவர்கள் மீறுதலில் தொடர்ந்து இருந்துகொண்டு, “மிருகத்தின் முத்திரையைப்” பெற்றுக்கொள்ளக்கூடிய மனிதர்களுடைய கட்டளைகளுக்கும், தேவனுடைய கட்டளைகளுக்கும் மத்தியில் சரியானதைத் தெரிந்துகொள்வதற்காகக் கொண்டுவரப்படுகின்றனர். — EV 449 (1911). 1தாங்கள் பெற்றிருக்கின்ற அல்லது தாங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த சத்திய அறிவைக்குறித்து மட்டுமே, தேவன் மக்களிடம் கணக்கு கேட்பார் என்று தெரிவிக்கின்ற இந்த வாக்கியமும், இதைப்போன்ற மற்ற வாக்கியங்களும் இந்த அதிகாரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள முந்தின பத்திகளின் வெளிச்சத்திலே புரிந்துகொள்ளப்படவேண்டும்..கச 164.1

    *****