Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓடைகள், மலைகள் மற்றும் மரங்கள்

    அந்தப் பட்டணத்திலே நாங்கள், ஜீவவிருட்சத்தையும் தேவனுடைய சிங்காசனத்தையும் கண்டோம். அந்தச் சிங்காசனத்திலிருந்து சுத்தமான தண்ணீருள்ள ஒரு நதி புறப்பட்டு வந்தது. அந்நதியின் இரு கரைகளிலும் ஜீவவிருட்சம் காணப்பட்டது. நதியின் இரு கரைகளிலும் உள்ள ஜீவவிருட்சத்தின் அடிமரம், பளிங்குபோன்ற சுத்தப் பொன்னால் ஆகியிருந்தது. முதலில் நான் இரு மரங்களைக் கண்டதாக நினைத்தேன். மீண்டுமாக நான் பார்த்தபோது, இரு மரங்களும் மேலே ஒரே மரமாக இணைந்திருப்பதைக் கண்டேன். எனவே இதுவே, ஜீவநதியின் இரு கரைகளிலும் வளர்ந்திருக்கும் ஜீவவிருட்சமாகும். அதன் கிளைகள், நாங்கள் நின்றிருந்த இடம்வரை வளைந்து பரவியிருந்தன. அதன் கனி, பொன்னும் வெள்ளியும் கலந்து உருக்கிவிட்ட வண்ணத்தில் உள்ளதைப் போல, மிகவும் மகிமையாகக் காணப்பட்டது. — EW 17 (1851).கச 211.3

    பளிங்கைப்போன்ற வற்றாத தெளிந்த நீரோடைகள் அங்கே இருந்தன. அதன் கரைகளில் அசைந்தாடும் மரங்கள் கர்த்தரால் மீட்கப்பட்டோர் நடந்துசெல்லும் பாதைகளில் தங்களது நிழலைப் பரப்பின. அங்கே பரந்துவிரிந்திருந்த சமவெளிகள் அழகான குன்றுகளாக எழும்பி நின்றன. அவை, உயரிய கொடுமுடிகளோடுகூடிய தேவ பர்வதங்களாக அமைந்திருந்தன. அந்த ஜீவ ஊற்றுகளண்டையில், அமைதியான சமவெளிகளில், இதுவரையில் அந்நியரும் பரதேசிகளுமாயிருந்த தேவனுடைய ஜனங்கள், தாங்கள் தங்கித் தாபரிக்கும் ஒரு வீட்டைக் கண்டடைவார்கள். — GC 675 (1911).கச 211.4