Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெந்தெகொஸ்தே நாளில் கொடுக்கப்பட்ட முன்மாரியின் விளைவுகள்

    ஆவியானவரின் செல்வாக்கின்கீழ் பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்கான துதியின் பாடல்களுடன், மனந்திரும்புதல் மற்றும் பாவ அறிக்கையின் வார்த்தைகள் ஒன்றாக கலந்தன… ஒரே நாளிலே, ஆயிரக்கணக்கானோர் மனந்திரும்பினர்…கச 134.4

    பரிசுத்த ஆவியானவர்… இதுவரை அவர்களுக்குப் பழக்கமில்லாத மொழிகளைச் சரளமாய்ப் பேசத்தக்கதாக வல்லமையை அவர்களுக்கு அளித்தார்… அவர்கள் தாங்களாகவே வாழ்நாள் முழுவதும் செய்து முடிக்க முடியாததை, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்காகச் செய்தார். — AA 38-40 (1911).கச 134.5

    அவர்கள் இருதயங்கள் அளவுக்கு மிஞ்சி, மிகவும் முழுமையான , மிகவும் ஆழமான, பற்பல விளைவுகள் ஏற்படுத்தக்கூடியதான, ஒரு தாராள சிந்தையால் நிறைக்கப்பட்டிருந்தது. எனவே அது பூமியின் கடைமுனைவரைக்கும் சென்று, கிறிஸ்துவின் வல்லமையைக்குறித்து சாட்சி கூறும்படிக்கு அவர்களைத் தூண்டியது. — AA 46 (1911).கச 134.6

    பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவர் பொழியப்பட்டதன் விளைவு என்ன? உயிர்த்தெழுந்த ஒரு இரட்சகரைப்பற்றின நற்செய்தி, மனிதர்கள் குடியிருக்கும் இவ்வுலகின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது… சபை, எல்லாத் திசைகளிலிருந்தும் மனந்திரும்பிய ஜனங்கள் தன்னிடத்தில் ஒன்றுசேர்க்கப்படுவதைக் கண்டது. பின்வாங்கிப் போனவர்கள் மீண்டும் மனந்திரும்புதலுக்குள் நடத்தப்பட்டனர்… கிறிஸ்துவின் குணங்களுக்கு ஒத்த குணங்களை வெளிப் படுத்துவதும், அவரது ராஜ்யம் விரிவடையைப் பாடுபடுவதுமே விசுவாசிகளின் இலட்சியமாக இருந்தது. — AA 48 (1911).கச 134.7