Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெற்றுக்கொண்ட வெளிச்சத்தின்படியே நாம் நியாயந்தீர்க்கப்படுவோம்

    நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த சிலாக்கியத்தைப் பெற்றிராத அநேகர், பெரிய வெளிச்சத்தைப் பெற்றிருந்தும் அதன்படி நடந்திராத அநேகருக்கு முன்பாக பரலோகத்தில் பிரவேசிப்பார்கள். அநேகர் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சிறந்த வெளிச்சத்தின்படியே வாழ்ந்து அதன்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள். — Letter 36, 1895.கச 157.3

    எச்சரிப்பின் செய்தி உலகத்தின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் வரைக்கும், போதுமான சொளிச்சமும் ஆதாரமும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் கொடுக்கப்படும்வரைக்கும், அனைவரும் நியமிக்கப்பட்ட காலத்திற்காகக் காத்திருக்கவேண்டும். ஒருசிலர் மற்றவரைக்காட்டிலும் குறைவான வெளிச்சத்தைப் பெற்றிருக்கலாம். என்றாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட வெளிச்சத்தின்படியே ஒவ்வொருவரும் நியாயந்தீர்க்கப்படுவர். — Ms 77, 1899.கச 157.4

    தேவனுடைய பிரமாணத்தைக்குறித்த பெரிய வெளிச்சம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரமாணம் குணத்தினுடைய தரத்தின் அளவாகும். இதற்கேற்ப மனிதன் இப்பொழுதே தனது குணத்தை மாற்றிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றான். இந்தச் சட்டங்களாலேயே, கடைசி மாபெரும் நாளிலே அவன் நியாயந்தீர்க்கப்படப்போகின்றான். அந்நாளிலே மனிதர்கள் பெற்றுக்கொண்ட வெளிச்சத்தின்படியே நியாயந்தீர்கப்படுவர். — GH Jan., 1901 (Supp).கச 157.5

    மாபெரும் வெளிச்சத்தைப் பெற்றிருந்தும் அதைப் புறக்கணித்தவர்கள், மிகவும் அநேக நற்பயன்கள் கொடுக்கப்படாதிருந்தவர்களைக்காட்டிலும், மிகவும் மோசமான ஒரு நிலையிலே நிற்பார்கள், அவர்கள் கர்த்தரை அல்ல, தங்களையே உயர்த்திக்கொண்டார்கள். ஒவ்வொரு தருணத்திலும் தேவன் மீது மனிதர் கொண்டுவந்த அவகீர்த்தியின் அளவுக்குத்தக்கதாக, அவர்கள் சுமக்கப்போகும் தண்டனையின் அளவும் இருக்கும். — 8MR 168 (1901).கச 157.6

    தனது தீர்மானத்தை ஞானமாய்ச் செய்திட, போதுமான வெளிச்சத்தை ஒவ்வொருவரும் பெற்றிருக்கவேண்டும். - GC 605 (1911).கச 157.7