Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபைத் தலைமையகத்தில் அதிகார துஷ்பிரயோகம்

    தவறான மனோபாவங்களினாலும் தவறான கொள்கைகளினாலும், ஜெனரல் கான்ஃபரன்சும் கறைப்பட்டதாக மாறிக்கொண்டு வருகின்றது... மனிதர்கள் தங்களது ஆளுகையின்கீழ் இருக்கின்றவர்களைப் பாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். தனி நபர்களை தங்களது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதற்கு உறுதிபூண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் ஆளுகை செய்வார்கள் அல்லது அழிப்பார்கள்...கச 34.3

    பதவி மனிதர்களை தெய்வங்களாக்கிவிட்டதைப்போல நினைத்துக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாளக்கூடிய வகையில் உருவாகியிருக்கின்ற வல்லமை, எனக்கு அச்சத்தைத் ஏற்படுத்துகின்றது; அச்சத்தை ஏற்படுத்திதான் ஆகவேண்டும். எவ்விடத்தில் எவரால் பயிற்சிக்கப்பட்டாலும், இது ஒரு சாபமே. - TM 359-361 (1895).கச 34.4

    ஒரு சில மனிதருக்கு முற்றிலும் அளவுக்கதிகமான கனமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், சிலர் தேவனைத் தங்கள் ஆலோசகராக ஏற்படுத்திகொள்வதில்லை. அயல்நாடுகளில் ஊழியத்தின் அவசியங்களைப்பற்றி இத்தகைய மனிதர்களுக்கு என்ன தெரியும்? தகவல் கேட்டு அவர்களிடம் வருகின்ற கேள்விகளுக்கு எப்படித் தீர்மானிப்பதென்று அவர்கள் எப்படி அறிவார்கள்? எழுதுவதில் தாமதமே இல்லாதிருந்தாலும், அயல் நாடுகளிலுள்ளவர்கள் தங்களது கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆகக்கூடும். - TM 321 (1896).கச 34.5

    தூர தேசங்களில் வசிக்கின்றவர்கள், பேட்டில் கிரீக்கிற்கு (அப்போதைய தலைமையாகம்) முதலாவது எழுதி அனுமது பெறாத பட்சத்தில், தங்கள் மனம் தங்களுக்குச் சரி என்று சொல்லுவதை செய்யமாட்டார்கள். முன்னேறிச் செல்வதற்க்கு முன்னதாக, அவ்விடத்திலிருந்து சரி அல்லது வேண்டாம் என்ற பதிலைப் பெறுவதற்கு அவர்கள் காத்திருப்பார்கள். - SpT-A (9) 32 (1896).கச 34.6

    ஜெனரல் கான்ஃபரன்சின் தலைவராக இருப்பதற்கு, ஒரு மனிதனைத் தெரிந்துகொள்ளுவது ஞாமற்றதாகும். ஜெனரல் கான்ஃபரன்சின் பணி விரிவடத்திருக்கின்றது. சில காரியங்கள் அவசியமில்லாமல் குழப்பத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறன. பகுத்தறியும் காரியம் குறைவுபட்டிருப்பது எனக்குக் காண்பிக்கப்பட்டது. பணித்தளம் ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்படவேண்டும், அல்லது தற்போது நடை முறையில் உள்ள காரியங்களில் மாற்றம் கொண்டு வருவதற்கு, வேறு ஏதாவது திட்டம் தீட்டப்பட வேண்டும். 53500 அங்கத்தினர்களும், ஆறு உள்பகுதி அலுவலகங்களும், ஏறக்குறைய முப்பது ஊழிய வேலையாட்களும், மூவர் அடங்கிய ஜெனரல் கான்ஃபரன்ஸ் செயற்குழுவையும் கொண்ட ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபை 1863-ல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இப்படிபட்ட ஒரு சிறிய ஸ்தாபனத்தைத் தலைமைதாங்கி, ஆலோ சனையளித்து, நடத்துவதற்கு ஜெனரல் கான்ஃபரன்ஸ் தலைவர் நன்கு திறம்படைத்தவராகவே இருந்தார், ஒவ்வொரு முக்கியமான கூட்டத்திலும் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ளவும், கூடுதலாக அச்சகப்பணியுடன் தொடர்புடையதாயிருந்த அதிகமான வேலையில் தனது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துவதற்கும் அவரால் முடிந்தது. இருப்பினும், 1896-ல் திருச்சபையின் ஊழியம், ஜக்கிய நாடுகளில் பெருமளவுக்குப் பரம்பி, ஜரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவரையிலும்கூட விரிவடைந்திருந்தது. இப்படிப் பரந்து விரிவடைந்து வருகின்ற பணியை மேற்பார்வையிட்டு, வழிநடத்துவது ஒரு மனிதனால் இனிமேலும் கூடாததாக இருந்தது. உலகம் முழுவதிலும் இருக்கின்ற நமது சபை அங்கத்தினர்கள் ஆலோசனைக்காக ஒரு மனிதனை மாத்திரம் எதிர்நோக்குகியிராதபடி, பணிக்களம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதை எலன் உவைட் வலியுறுத்தினார். ஒன்றிய கான்ஃபரன்ஸ் அலுவலகங்களும், உலகளாவிய மண்டலங்களும் உருவாக்கப்பட்டதன் மூலம் இது நிறைவடைந்தது. - TM 342 (1896).கச 35.1