Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நாட்டுப்புறத்திற்கு அவசரகதியில் செல்ல ஆலோசனை இல்லை

    ஒவ்வொருவரும் ஞானமாய்த் தீர்மானிக்க நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். உவமையில் சொல்லப்பட்டுள்ளபடி, கட்ட ஆரம்பித்து முடிக்க இயலாமற்போன அந்த மனுஷனைப்போல இருக்க வேண்டாம். இடம்பெயருதல் மற்றும் அத்துடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அசெளகரியங்களும் கவனமாய்ப் பரிசீலிக்கப்பட்டு, நிறுத்துப்பார்க்கப்படாத பட்சத்தில் ஒரு அடிகூட எடுத்துவைக்கலாகாது.கச 88.1

    தங்களுக்கு ஒன்றுமே தெரியாத சில காரியங்களை செய்யும்படியாக அதனுள் நுழைந்து, எதையாவது துரிதமாக செய்துவிடக்கூடிய சில தனிநபர்கள் அங்கு இருக்கலாம். ஆனால், இப்படி செய்வதை தேவன் விரும்புவதில்லை… 1ஏப்ரல் 18-19, 1906-ல் நடந்த சான்பிரான்சிஸ்கோவின் பூமியதிர்ச்சி மற்றும் தீ விபத்தினால் 503 பேர் மரித்தனர். மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து சேதமடைந்ததாகக் கணக்கிடப் பட்டது. கச 88.2

    ஒழுங்கற்ற முறையில் எதுவுமே செய்யப்பட வேண்டாம். ஆர்வத்தைத் தூண்டுகின்ற உத்வேகமிக்க சொற்பொழிவுகள் உற்சாகத்தைக்கிளர்ந்ததெழச் செய்யும்; அதனால் மாபெரும் இழப்பு அல்லது உடைமையை தியாகம் செய்யும் நிலை உண்டாகலாம், அது தேவனுடைய ஒழுங்கின்படியானதல்ல. நிதானம், ஒழுங்கான முன்யோசனை, ஆரோக்கியமான கொள்கைகள் மற்றும் நோக்கங்களின் குறைபாட்டினால். அவசியமாகப் பெற்றிருக்கவேண்டிய வெற்றி ஒரு தோல்வியாக மாறிவிடுகின்றது. 2ருமதி உவைட் அவர்களின் வலியுறுத்தலுக்கு மாறுத்தரமாக, கிட்டத்தட்ட 100-லிருந்து 200-க்கு உட்பட்ட மக்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பட்டணத்தை விட்டு நாட்டுப்புற இடத்திற்குச் செல்ல ஆயித்தமாகியிருந்தனர் என்பதைக்குறித்து திருமதி. உவைட்டிற்கு தகவல் அளிக்கும்படியாக, முன்னணியிலிருந்த பேட்டில் கிரீக்கின் ஊழியரிடமிருந்து வந்த கடிதத்திற்கு திருமதி, உவைட் டிசம்பர் 22 1893-ல் பதில் அளித்து எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்டது. பார்க்க: - 2SM. PP 361-364. — 2SM 362, 363 (1893).கச 88.3