Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    13. பின்மாரி

    ஆவியானவரின் வேலை மழைக்கு ஒப்பானது

    “அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும், பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.” கிழக்கத்திய நாடுகளிலே முன்மாரி விதைப்பின் காலத்திலே பெய்யும். விதைத்திருக்கின்ற விதை முளைப்பதற்கு அது அவசியமாயிருக்கின்றது. இப்படிப்பட்ட வளப்படுத்தும் மழையினுடைய செல்வாக்கின்கீழ் இளஞ்செடிகள் முளைவிட ஆரம்பிக்கும். அந்தப் பருவ காலத்தின் முடிவினில் பெய்கின்ற பின்மாரி, கதிர்களை முற்றச்செய்து அறுவடைக்குப் பயிரை ஆயத்தமாக்குகின்றது. பரிசுத்த ஆவியானவரின் வேலையை நமக்கு விளக்கிச் சொல்ல, கர்த்தர் இயற்கையின் இந்தச் செயல்பாடுகளை உபயோகிக்கின்றார்.கச 133.1

    விதையை முளைக்கச் செய்ய பனியும் முன்மாரியும், பயிரை அறுவடைக்கு ஆயத்தப்படுத்த பின்மாரியும் எப்படி கொடுக்கப்படுகின்றதோ, அதேபோல ஆவிக்குரிய இயல்பான வளர்ச்சியின் செயல்முறையில் நாம் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு வளர்ந்தேற பரிசுத்த ஆவியானவரும் கொடுக்கப்படுகின்றார். விதை முதிர்ந்து வருவது, ஆத்துமாவில் தேவ கிருபையினுடைய வேலையின் முழுமையைக் குறிக்கின்றது. தேவனுடைய நீதி ஒழுக்க சாயல் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நம் குணங்களில் பூரணமாக்கப்பட வேண்டும். நாம் முற்றிலுமாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவராக மாற்றப்படவேண்டும்.கச 133.2

    பூமியின் அறுவடைக்கு விளைச்சலை முற்றச் செய்கின்ற பின்மாரி, மனுஷகுமாரனின் வருகைக்கு சபையை ஆயத்தப்படுத்துகின்ற ஆவிக்குரிய கிருபையைக் குறிக்கின்றது. ஆனால், முன்மாரி பொய்யாவிட்டால் (விதையில்) உயிர் இருக்காது; பச்சையான கதிர் முளைக்காது; முன்மாரி தன்னுடைய வேலையைச் செய்திராத பட்சத்தில், பின்மாரியால் எந்த ஒரு விதையையும் முழுமையடையச்செய்ய முடியாது. — TM 506 (1897).கச 133.3