Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    4. தேவனுடைய கடைசிக்கால திருச்சபை

    தேவனுடைய ஜனங்கள் அவரது கற்பனைகளைக் கைக்கொள்வர்

    தரையிலிட்டு மிதிக்கப்பட்ட பிரமாணத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டும், உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை உலகத்திற்குக் காண்பித்துக்கொண்டும் இருக்கின்ற ஒரு சபை பூமியிலே தேவனுக்காக இருக்கின்றது...கச 30.1

    திறப்பிலே நின்றுகொண்டு, திறப்பானதை அடைத்து, பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களை கட்டுகின்ற சபை நிகழ் காலத்தில் உலகத்திலே ஒன்றே ஓன்றுதான் இருக்கின்றது...கச 30.2

    தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, இயேசுவின் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுகின்ற மீதமான ஜனத்தைக்குறித்து கொடுக்கப்பட்டிருக்கின்ற வர்ணனையை நிறைவேற்றிக்கொடிருக்கின்ற, அந்த ஒரே ஜனத்துக்கு விரோதமான ஒரு கண்டனக்குரலை எழுப்பாதப்படிக்கு நாம் ஜாக்கிரதையாயிருப்போமாக... தேவனுடைய நியாயப்பிரமாணத்தை நிலைநாட்டுகிறதற்கும், சத்தியத்தை போதிப்பதற்கும், தங்களது திறமைகளில் வேறெதற்கும் இரண்டாவதாக ஒப்பிடப்பட முடியாத, எல்லாவற்றையும்விட மேம்பட்ட நிலையிலுள்ள ஒரு விசேஷித்த ஜனம், ஒரு சபை பூமியிலே தேவனுக்கென்று இருக்கின்றது. என் சகோதரனே, ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபைதான் பாபிலோன் என்று உபதேசித்துக்கொண்டிருப்பாயானால் நீ தவறிழைக்கின்றாய். 1வெளிப்படுத்தின் விசேஷ புத்தகம் - காணக்கூடிய மீதமானோர் (12:17) மற்றும் பாபிலோனில் “என் ஜனங்கள்” 18.4) என்று இருவகையான தேவனுடைய ஜனங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இந்த அதிகாரம் முதலாம் வகையினரைக் குறித்தும், “உரத்த சத்தம்,” என்ற 14 ஆம் அதிகாரம் இரண்டாம் வகையினரைக் குறித்தும் விவரிக்கின்றது. - TM 50, 58, 59 (1893).கச 30.3