Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உடன்பாடான மனநிலை கொண்டிருக்கும் மதத் தலைவர்கள்

    உலகம் சார்ந்த தத்துவத்தின் விவாதம், தேவனுடைய நியாயத் தீர்ப்புகளைக்குறித்த பயத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும்பொழுது, மத போதகர்கள் சமாதானமான — செழிப்பான் — முன்னோக்கியுள்ள நீண்ட யுகத்தைச் சுட்டிக்காட்டி போதித்துக்கொண்டிருக்கும்பொழுது, உலகம் முழுவதும் வியாபாரத்திலும், உலக இன்பங்களிலும், நடுவதிலும், கட்டுவதிலும், புசிப்பதிலும், குடிப்பதிலும், களியாட்டாங்களில் பங்கெடுப்பதிலும் மூழ்கியிருக்கும்பொழுது, தேவனுடைய எச்சரிப்புகளை உதறித்தள்ளி, அவரது ஊழியக்காரர்களை பரியாசம் பண்ணிகொண்டிருக்கும்பொழுதும் — “அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” — PP 104 (1890).கச 169.6

    தேவனுடைய நாள் எப்பொழுது வந்தாலும், தேவபக்தி இல்லாதவர்கள் எதிர்பாராத நேரத்திலேயே அது வரும். எவ்வித மாற்றமுமின்றி வாழ்க்கை அதன் சுழற்சியில் சென்று கொண்டிருக்கும்போதும், மனிதர்கள் கேளிக்கைகளிலும், தொழிலிலும், வியாபாரப் போக்கு வரத்திலும், பணம் சம்பாதிப்பதிலும் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் போதும் மதத்தலைவர்கள் உலகத்தினுடைய அறிவுப் பெருக்கத்தையும், முன்னேற்றத்தையுங்குறித்து மிகைப்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கும்போதும் மக்கள் ஒரு பொய்யான பாதுகாப்பில் தாலாட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதும் — அந்த நேரத்திலே, பாதுகாப் பில்லாத வீட்டில் திருடன் நடு இரவில் நுழைந்து கொள்ளையடிப் பதைப்போல, தேவபக்தியில்லாத அலட்சியப்போக்குள்ள மனிதர்கள்மீது, சடுதியான அழிவு வரும், அவர்கள் தப்பிப்போவதில்லை.” — GC 38 (1911).கச 170.1