Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனிதர்கள் முழுநேரமும் தொழிலில் ஈடுபட்டிருப்பர்

    லோத்து சோதோமின் அழிவைக்குறித்து தனது குடும்ப அங்கத்தினருக்கு எச்சரித்தபோது, அவர்கள் அவன் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. மாறாக அவனை, தீவிர ஆர்வமுள்ள ஒரு மத வெறியனாகப் பார்த்தார்கள். எனவே அப்போது வந்த அந்த அழிவு, அவர்களை ஆயத்தமற்றவர்களாகக் கண்டது. அப்படியாகவே, கிறிஸ்து வரும்போதும் இருக்கும். விவசாயிகளும், வழக்கறிஞர்களும், வாணிபர்களும் முழுநேரமும் தங்களது தொழிலிலே மும்முரமாய் ஈடுபட்டிருப்பார்கள். அப்பொழுது கர்த்தருடைய நாள் அவர்கள்மீது ஒரு கண்ணியைப் போல வரும். — RH March 10, 1904.கச 169.3

    ஊழியக்காரர்களும், விவசாயிகளும். வியாபாரிகளும், வழக்கறிஞர்களும், பெரிய மனிதர்களும், வெளித்தோற்றத்தில் நல்ல மனிதர்களாக, இருப்பவர்களும், சமாதானமும் சவுக்கியமும் என்று உரத்துக்கூறும்போது சடுதியான அழிவு வரும். கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை தேவனுடைய நாள் ஒரு கண்ணியைப் போல வரும் என லூக்கா குறிப்பிடுகின்றார் — அதாவது, காடுகலில் இரைதேடிப் போய்க் கொண்டிருந்த ஒரு விலங்கு ஐயோ! திடீரென வேடனுடைய மறைவான கண்ணியில் மாட்டி இரையாவதைப்போல அது இருக்கும். — 10MR 266, (1876).கச 169.4

    மனிதர்கள் நிர்விசாரமாய் பொழுதுபோக்குகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கும்போது, வாங்குவதிலும் விற்பதிலுமே அவர்களது கவனம் முழுவதும் மூழ்கியிருக்கும்போது, யாரும் எதிர்பாராதவிதத்தில் திருடன் அணுகுவான். அப்படிப்போலவே, மனுஷகுமாரனுடைய வருகையிலும் இருக்கும். — Letter 21, 1897.கச 169.5