Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    2. கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகைக்கான அடையாளங்கள்

    நமது கர்த்தருடைய மாபெரும் தீர்க்கதரிசனம்

    எருசலேமின் அழிவைக்குறித்தும், மனுஷகுமாரனுடைய வருகைக்கு முன் நிறைவேறவேண்டிய அடையாளங்களைக்குறித்தும் கிறிஸ்துவானவர் தமது சீடர்களை எச்சரித்திருந்தார். மத்தேயு இருபத்து நான்காம் அதிகாரம் முழுவதும், இச்சம்பவத்திற்கு முன் நிகழும் நிகழ்வுகளைப்பற்றிய ஒரு தீர்க்தரிசனம் ஆகும். இவ்வுலகம் அக்கினியால் கடைசி மாபெரும் அழிவைச் சந்திக்கப்போவதைக் குறிப்பிட்டுக்காட்டும் படி, எருசலேமின் அழிவு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. - Ms 77, 1899.கச 12.1

    தமது இரண்டாம் வருகைக்கு முன்னதாக நிகழவேண்டிய பயங்கரமான நியாயத்தீர்ப்புகளைப்பற்றி, கிறிஸ்துவானவர் ஒலிவ மலை யின் மீதிருந்தபடி முன்னதாகவே சொல்லியிருந்தார்: “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்... ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத். 24 : 6 - 8). இந்தத் தீர்க்கத்ரிசனங்கள் எருசலேமின் அழிவின்போது ஒரளவிற்கு நிறைவேறியிருந்தாலும், கடைசி நாட்களில் முழுமையாக நிறைவேறும்போது, நேரடியாக அதிகம் பொருந்துவதாக இருக்கின்றது. - 5T 753 (1899).கச 12.2