Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வரப்போகும் சம்பவங்கள் கர்த்தருடைய கரங்களில் இருக்கின்றன

    ஒரு அதிபதியில்லாமல் இவ்வுலகம் இல்லை. வரப்போகும் சம்பவங்களின் நிகழ்ச்சிநிரல் கர்த்தருடைய கரங்களில் இருக்கின்றது. பரலோகத்தின் மகத்துவமானவர், தேசங்களின் முடிவையும் தமது சொந்தப் பொறுப்பில் உள்ள தமது திருச்சபையின்மீதான அக்கறையையும் உடையவராக இருக்கின்றார். - 5T 753 (1889).கச 20.1

    அடையாளமாக சுட்டிக்காட்டப்படும் இத்தகைய காட்சிகள் (வனாந்தரத்தில் கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள்) ஒரு இரட்டை நோக்கத்தை அளிக்கின்றன. பூமியினுடைய இயற்கைச் சக்திகள் மாத்திரம் சிருஷ்டிகரின் கட்டுப்பாட்டின் கீழாக இருக்கவில்லை, தேசங்களின் மதரீதியான இயக்கங்களும்கூட அவரது கட்டுப்பாட்டின் கீழாகத்தான் இருக்கின்றன என்பதை, தேவனுடைய ஜனங்கள் அவைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர். விசேஷமாக, ஞாயிறு ஆசரிப்பு வலியுறுத்தப்படுதல் தொடர்பான காரியத்தில், இது உண்மையாக இருக்கின்றது. - 19 MR 281 (1902).கச 20.2

    மாபெரும் முடிவான வேளையில், எப்படி சமாளிக்கவேண்டும் என்று அறிந்திராத வகையில், குழப்பங்களை நாம் சந்திக்கநேரிடும், ஆயினும், பரலோகத்தின் முப்பெரும் வல்லமைகள் கிரியை செய்துகொண்டிருக்கின்றன். என்பதையும், தேவன் தமது நோக்கங்களை நிறைவேற்றி முடிப்பார் என்பதையும் நாம் மறக்காதிருப்போமாக! - Ev 65 (1902).கச 20.3

    புதிரான அந்த சக்கரங்கள் எப்படி கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழிருந்த கரத்தால் நடத்தப்பட்டதோ, அப்படியே மனித இனத்தினுடைய சம்பவங்களின் புதிரான காரியம் அனைத்தும், தெய்வீகக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தேசங்களின் குழப்பங்கள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியிலும், கேருபீன்களுக்கு மேலாக வீற்றிருப்பவர், இந்தப் பூமியின் நடவடிக்கைகளை இன்னும் நடத்தி வருகின்றார். 4பார்க்க: எசே. 1:4, 26; 10:8; தானி. 4:17, 25,32. - Ed 178 (1903).கச 20.4

    மனித சரித்திரத்தின் ஆண்டுகளிலே, தேசங்களின் வளர்ச்சியும், ராஜ்யங்களின் எழுச்சியும் வீழச்சியும், மனிதனின் சித்தத்தையும் வீரத்தையும் சார்ந்திருப்பதுபோலவே தோன்றுகின்றன. சம்பவங்கள் நடைபெறும் விதம், பெரும்பாலும் மனிதனுடைய வல்லமையினாலும், இலட்சியத்தினாலும், நிலையற்ற மனநிலையினாலும் மாத்திரமே தீர்மானிக்கப்படுவதுபோல் தோன்றுகிறது. ஆனால், தேவனுடைய வார்த்தையிலே திரைச்சீலை புறம்பாக அகற்றப்பட, மனிதனின் விருப்பங்களிலும், வல்லமை மற்றும் உணர்வுகளின் அனைத்து நிகழ்வுகளிலும் எதிர்நிகழ்வுகளிலும், சர்வகிருபை பொருந்தினவருடைய ஏதுகரங்கள், அமைதியாகவும் பொறுமையாகவும் அவரது சொந்த சித்தத்தின் ஆலோசனைகளையே நிறைவேற்றி வருகின்றதை நாம் முன்பாகவும், பின்பாகவும், நெடுகிலுமாகக் காணலாம். - PK 499, 500 (C.1914).கச 20.5