Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை

    முடிவில்லாதவராகிய தேவன், எல்லா தேசங்களுடனான தமது தவறேதுமற்ற துல்லியமான கணக்கை, இன்னமும் வைத்துக்கொண்டுதான் இருக்கின்றார். அவரது இரக்கம் மனந்திரும்புதலுக்கான அழைப்புகளுடன் மென்மையாக இருக்குமட்டும், இந்தக் கணக்கு திறந்ததாகவே நிலைத்திருக்கும். ஆனால், தேவன் குறித்திருக்கின்ற ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த எண்கள் அடையும்போது, அவரது கோபாக்கினையின் வேலை துவங்கிவிடும். - 5T 208 (1882).கச 27.6

    தேவன் நாடுகளைக் குறித்ததான ஒரு பதிவேட்டினை வைத்திருக்கிறார். பரலோகத்தின் புத்தகங்களிலே அவைகளுக்கெதிரான கணக்குகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. வாரத்தின் முதலாம் நாளை மீறினால் தண்டனையளிக்கப்படும் என்பது ஒரு சட்டமாக மாறும்போது, அவைகளின் பாத்திரம் நிரம்பிவிடும். 7BC 910 (1886).கச 27.7

    நாடுகளைக் குறித்ததான ஒரு கணக்கீட்டை தேவன் வைத்திருக்கிறார்… தேவனுடைய கிருபையின் தீர்மானிக்கப்பட்ட எல்லையை அக்கிரமம் முழுமையாக எட்டுகின்ற காலம் நிறைவேறும்போது, அவரது பொறுமை முடிவடையும். பரலோகத்தின் பதிவேடுகளில் குவித்து வைக்கப்பட்ட எண்ணிக்கைகள் மீறுதலின் தொகையைப் பூர்த்தி செய்யும் போது, கோபாக்கினை வரும். - 5T 524 (1889).கச 28.1

    பிரமாணத்தை மீறுபவனை தேவனுடைய இரக்கம் நீண்ட காலமாக பொறுத்துக்கொண்டிருக்கும் வேளையில், மனிதர்கள் மென்மேலும் பாவம் செய்துகொண்டே இராதபடிக்கு, அதற்கு அப்பால் ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லை எட்டப்படும்பொழுது. இரக்கத்தின் ஈவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, பின்பு நியாயத்தீர்ப்பின் ஊழியம் துவங்கிவிடும். - PP 162, 165 (1890).கச 28.2

    மனிதர்கள் தங்களது ஏமாற்றுத்தனத்திலும், கர்வத்திலும் மென்மேலும் கடந்துபோகக் கர்த்தர் அவர்களை அனுமதிக்கமாட்டார் என்ற ஒரு நிலையை அடையக்கூடிய காலம் வந்துகொண்டிருக்கிறது. அப்போது, யேகோவாவின் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். - 9T 13 (1909).கச 28.3

    யேகோவாவின் நியாயத்தீர்ப்புகள் தாமதித்துக்கொண்டே இருப்பதில்லை. அதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது. - PK417 (c. 1914).கச 28.4