Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஞாயிறு ஆசரிப்புச் சட்ட ஆதரவாளர்கள் தாங்கள் செய்கிறதை உணராதிருத்தல்

    ஞாயிறு ஆசரிப்பு இயக்கம் தற்போது இருளிலே அதனுடைய வழியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. தலைவர்கள் அதன் உண்மையான விஷயத்தை மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த இயக்கத்துடன் இணைந்திருப்பவர்களில்கூட அநேகர், அதன் உள்நோக்கம் எவ்விடத்திற்கு குறிப்பிட்ட ஒரு வழியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதனை அறியாதிருக்கின்றனர்… அவர்கள் குருட்டுத்தனத்தில் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். தாங்களை, சுதந்தரமும் சுயாதீனமுமான ஒரு தேசமாக ஆக்கியிருக்கிற கொள்கைகளை புராட்டஸ்டண்ட் அரசாங்கம் தியாகம் செய்து, போப்பாதிக்க போலிக் கொள்கைகளையும் போப்பாதிக்க வஞ்சகங்களையும், பிரபலப்படுத்துகிற நியதிகளை சட்டமியற்றுதலின்மூலம் அரசியலமைப்புக்குள் கொண்டுவருமானால், இருண்ட புகங்களின் ரோம அருவருப்புகள் தாங்கள் மறுபடியும் மூழ்குகிறதை அவர்கள் காணாதிருக்கிறார்கள். — RH Extra Dec. 11, 1888. கச 92.1

    ஞாயிறு ஆசரிப்பை அமலாக்குவதற்காக, இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறவர்களில் அநேகர் கூட, இந்தச் செயலைத் தொடர்ந்து வரக்கூடிய விளைவுகளுக்குக் குருடாக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மத சுதந்திரத்திற்கெதிராக நேரடியாக மோதிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அறியாதிருக்கின்றனர். வேதாகம் ஓய்வுநாள் வலியுறுத்தும் காரியங்களையும், ஞாயிறு ஆசரிப்பு அமைப்பு எந்தப் பொய்யான அஸ்தி பாரத்தின்மேல் போடப்பட்டிருக்கின்றது என்பதையும் ஒருபோதும் உணராதிருக்கின்ற அநேகர் இருக்கின்றார்கள்…கச 92.2

    அரசியமைப்புச் சாசனத்தை மாற்றி, ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்தக்கூடிய ஒரு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு முயற்சியை எடுப்பவர்கள், அதனுடைய விளைவு என்னவாய் இருக்குமென்பதைனசிறிதளவே உணர்ந்திருக்கின்றனர் ஒரு மாபெரும் நெருக்கடி இப்போதே நம்மீது வந்திருக்கின்றனர். — 5T 711, 753 (1889),கச 92.3