Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    “பாத்திரத்தை சுத்தமாயும், சரியான பக்கத்தை மேற்புறமாகவும் வையுங்கள்”

    பின்மாரியைக்குறித்து நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம், நம் பாத்திரத்தை சுத்தமாகவும், சரியான பக்கத்தை மேற்புறமாகவும் வைத்து, பரலோகப் பின்மாரியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்பட வேண்டியதே ஆகும். அதோடுகூட, பின்மாரி மழை என்னுடைய பாத்திரத்தில் பெய்யட்டும்; மூன்றாம் தூதனோடுகூட இணையப்போகின்ற மகிமையான தூதனுடைய வெளிச்சம் என்மீது பிரகாசிக்கட்டும்; உம்முடைய ஊழியத்தில் எனக்கு ஒரு பங்கைத் தாரும்; அறிவிப்புச் செய்தியை நானும் முழங்கட்டும்; இயேசு கிறிஸ்துவுடன் நானும் ஓர் உடன் வேலையாளாக இருக்கட்டும் என்று தொடர்ந்து ஜெபிக்கவேண்டும். இப்படியாக தேவனைத் தேடுவீர்களானால், அவர் உங்களை தகுதியுள்ளவர்களாக்கி, தமது கிருபையை உங்களுக்கு எந்நேரமும் அளித்துக்கொண்டே இருப்பார் என்று நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்கின்றேன். — UL 283 (1891).கச 140.6

    பதில் திடீர் வேகத்துடனும், மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாகவும் வரலாம். அல்லது நமது விசுவாசம் சோதனைக்குட்படும்படியாக சில நாட்களோ அல்லது சில வாரங்களோ தாமதிக்கலாம். ஆனால் நமது ஜெபத்திற்கு எப்படிப் பதிலளிக்கவேண்டும், எப்போழுது பதிலளிக்கவேண்டும் என்பது தேவனுக்குத் தெரியும். தெய்வீக வாய்க்காலோடு நம்மை நாமே தொடர்புபடுத்திக்கொள்ளுவதே நம்முடைய வேலையின் பங்காக இருக்கின்றது. வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கின்றார். ஏக இருதயத்தொடும், ஏக சிந்தையோடும், எல்லாப் பொறாமையையும், எல்லாக் குரோதத்தையும் புறம்பே தள்ளிவிட்டுத் தாழ்மையுடன் மன்றாடுகிறவர்களாக, விழித்திருந்து காத்திருக்க வேண்டியதே நமக்குரிய பெரிதும் முக்கியம் வாய்ந்ததுமான காரியமாகும். பெந்தெகொஸ்தே நாளில் ஜெபத்திலே தரித்திருந்து காத்திருந்தவர்களுக்கு எதைச் செய்தாரோ, அதை நமக்கும் செய்ய நமது பிரதிநிதியும் தலைவருமாகிய இயேசு ஆயத்தமாயிருக்கின்றார். — 3SP 272 (1878).கச 141.1

    பரிசுத்த ஆவியின் பின்மாரி எப்போது ஊற்றப்படும் என்பதற்கும், வல்லமையான தூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து மூன்றாம் தூதனுடன் இணைந்து இந்த உலகத்திற்கான கடைசி வேலையை எப்போது முடிவுக்குக்கொண்டுவருவார் என்பதற்கும், குறிப்பிடும்படியான நேரம்பற்றி பேசுவதற்கு எதுவும் என்னிடமில்லை. பரலோக இளைப்பாறுதலுக்கு (பின்மாரி) நாம் ஆயத்தமாக இருப்பதிலும், நம்முடைய விளக்குகளைத் தூண்டிவிட்டு எரிகிறதாக வைத்துக்கொண்டிருப்பதிலும் மட்டுமே, நமது ஒரே பாதுகாப்பு இருக்கின்றது என்பதே தூது ஆகும். — 1SM 192 (1892).கச 141.2