Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    1. பூமியின் கடைசி நெருக்கடி

    எதிர்காலத்தைக் குறித்த உலகளாவிய அச்சம்

    உயிரோடிருக்கின்ற அனைவருக்கும் திணறடிக்கக்கூடிய அளவிற்கு கவனத்தைக் தூண்டுகின்ற ஒரு காலமாக நிகழ்காலம் இருக்கின்றது. ஆட்சியாளர்களும், அரசியல் மேதைகளும், நம்பிக்கையும் அதிகாரமுமிக்க பதவிகளை வகிக்கும் மனிதர்களும், அனைத்துத் தரப்பினரான ஆண் மற்றும் பெண் சிந்தனையாளர்களும், நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களின்மீது, தங்களது கவனத்தைப் பதித்திருக்கின்றனர். நாடுகளுக்கிடையே நிலவி வருகின்ற உறவு நிலைகளை, அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். பூமிக்குரிய எல்லா மூலப்பொருள்களை ஆட்கொண்டு வருகின்ற கடுமையான நிலையை அவர்கள் உற்றுநோக்குகின்றனர்; ஒரு பிரமிக்கத்தக்க நெருக்கடி நிலையின் விளிம்பில் உலகம் இருக்கின்றது என்றும், ஏதோ ஒரு மாபெரும் முடிவான காரியம் நிகழ இருக்கின்றது என்றும், அவர்கள் அடையாளம் கண்டுகொள்கின்றனர். - PK 537 (c. 1914)கச 6.1

    நிலத்திலும் கடலிலும் ஏற்படுகின்ற பேரழிவுகள், சமுதாயத்தின் ஒழுக்கநிலைகுலைந்த தன்மை, யுத்தம் குறித்த எச்சரிப்புகள் போன்றவை, நிகழவிருக்கின்ற முக்கியமான ஏதோ ஒரு காரியத்திற்கு அடையாளங்களாக இருக்கின்றன. நெருங்கிவந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களின், மாபெரும் முக்கியத்துவத்தை அவைகள் முன்னறிவிக்கின்றன. தீமையின் ஏதுகரங்கள் தங்கள் வல்லமைகளை ஒன்றிணைத்து பெலப்பட்டு வருகின்றன. கடைசி மாபெரும் நெருக்கடிக்கு, அவைகள் பெலனடைந்து வருகின்றன. நமது உலகில், மாபெரும் மாற்றங்கள் சீக்கிரத்தில் நிகழவிருக்கின்றன. மேலும், இறுதியான நிகழ்வுகள் மிகவும் விரைவான ஒன்றாக இருக்கும். - 9T 11 (1909).கச 6.2