Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கவனமான ஓய்வுநாள் ஆசரிப்பு1

    ஓய்வுநாள் ஆசரிப்பின் மூலமாக தம்மைப்பற்றின ஒரு அறிவை மனிதர்கள் மத்தியிலே பாதுகாக்கும்படியாக, நம்முடைய பரலோகப் பிதா வாஞ்சையோடிருக்கின்றார். ஓய்வுநாள் நமது மனங்களை உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவனிடத்தில் திருப்பவேண்டும் என்றும், அவரை அறிந்துகொள்வதன்மூலம் நாம் சமாதானத்தையும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் வாஞ்சிக்கின்றார். — 6T 349 (1900).கச 56.1

    நியாயப்பிரமாணத்தின்படி ஓய்வுநாளை ஆசரிப்பதற்கும், எப்பொழுதும் அதனை நினைவில் வைத்துக்கொளவதற்குமான ஆயத்தத்தை வாரம் முழுவதிலும் நாம் செய்யவேண்டும். வெறும் சட்டரீதியான ஒரு காரியம்போல மாத்திரம் ஓய்வுநாளை நாம் ஆசரிக்கக் கூடாது. வாழ்க்கையின் அனைத்து நடவடிக்கைகளின்மீதும், அதனுடைய ஆவிக்குரிய அர்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.கச 56.2

    இவ்வாறு ஓய்வுநாள் நினைவுக்கூரப்படும்பொழுது, இம்மைக்குரிய காரியங்கள் ஆவிக்குரிய காரியங்களை ஆக்கிரமிக்கும்படி விட்டுவிட முடியாது. ஆறு வேலை நாட்களுக்குரிய எந்த வேலையயும் ஓய்வுநாளில் செய்யப்படும்படி விட்டுவைக்கப்படக் கூடாது. — 6T 353, 354 (1900).கச 56.3

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் கண்டிப்பாக சந்திக்கப்பட வேண்டும். நோயாளிகள் கவனிக்கப்பட வேண்டும். ஏழைகளுடைய தேவைகள் வழங்கப்பட வேண்டும். துன்புறுவோரை ஓய்வுநாளில் விடுவிப்பதைப் புறக்கணிக்கும் ஒருவன் குற்றமற்றவனாக விடப்படமாட்டான். தேவனுடைய பரிசுத்த ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது. எனவே, அந்நாளிலே செய்யப்படுகின்ற இரக்கமுள்ள கிரியைகள் அதனுடைய நோக்கத்தோடு பரிபூரண ஒத்திசைவாக இருக்கும். ஓய்வுநாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ, விடுவிக்கப்படக்கூடிய தமது சிருஷ்டிகள் வேதனையினால் ஒரு மணிநேரம் துன்புறுவதைக்கூட தேவன் வாஞ்சிப்பதில்லை. — DA 207 (1898).கச 56.4