Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேற்றுமைகளை அல்ல, ஒற்றுமையை வலியுறுத்துங்கள்

    சத்தியத்தின் வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறவர்களுக்காக, மாறுவேடத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சோதனைகள் ஆயத்தமாக்கப்பட்டிருக்கின்றன. வேத வார்த்தைகளின் புதிய விளக்கங்கள் மற்றும் புதிய உபதேசங்களை, முதலாவது நாம் பெற்றுக்கொள்வதைவிட, அவைகளை அனுபவம் வாய்ந்த சகோதரர்களுக்கு முன்பாக ஒப்படைப்பதிலேயே நம்முடைய ஒரே பாதுகாப்பு இருக்கிறது. எனவே, வேதவாக்கியங்களின் புதிய உபதேசத்தையோ அல்லது புதிய விளக்கங்களையோ பெற்றுக்கொள்ளும்போது, அவைகளை அவர்களுக்கு (அனுபவம் வாய்ந்த சகோதர்களுக்கு) முன்பாக, தாழ்மையான மற்றும் கற்றுக்கொள்ளும் ஆவியோடு, ஊக்கமான ஜெபத்துடன் வைத்து, அவர்களது தீர்ப்பிற்கு ஒப்புக் கொடுங்கள். ஏனெனில், “அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்”…கச 66.3

    ஏதோ புதிய வெளிச்சம் அல்லது புதிய வெளிப்பாட்டைப் பெற்றுவிட்டதாகக் கூறும் ஆண்களும் பெண்களும் எழும்புவார்கள். பூர்வ சிறப்படையாளங்களான உபதேசங்களின்மீதுள்ள விசுவாசத்தை நிலை தடுமாறச் செய்வதே அவர்களின் நோக்கமாகும். அவர்களின் உபதேசங்கள் தேவனுடைய வார்த்தையின் பரீட்சையை சந்திக்க முடியாததால் ஆத்துமாக்கள் வஞ்சிக்கப்படுவார்கள். பொய்யான அறிக்கைகள் எங்கும் பரப்பப்படும். சிலர் இக்கண்ணியிலே பிடிக்கப்படுவார்கள்… சத்தியத்திலிருந்து மனிதர்களை இழுத்துச் செல்ல, சாத்தான் இடைவிடாது வகைதேடிக்கொண்டிருப்பதால், தவறான கருத்தின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராக நம்மால் மிகுந்த தகவனத்துடன் இருக்கமுடியாது. — 5T 293, 295, 296 (1885). கச 66.4

    ஜக்கியப்பட்டிருப்பதும மிகவும் அவசியமானது என்று நாம் தோன்றச் செய்யவேண்டும். நமது கருத்துக்களுக்கு மற்றவர்கள் வரவேண்டும் என்பது நமக்கு அவசியமல்ல. ஆனால், அனைவருமே கிறிஸ்துவின் தாழ்மையையும் சாந்தத்தையும் நாடுவார்களானால், அவர்கள் கிறிஸ்துவின் சிந்தையைப் பெறுவார்கள். அதன் பிறகு ஆவியின் ஜக்கியம் அங்கு இருக்கும். — Letter 15, 1892. கச 66.5

    சத்தியத்தை நம்புவதாக உரிமைபாராட்டுகின்ற அனைவரும், தங்களது சகோதரரோடு ஒன்றுபட்டிருக்கவேண்டும். என்று நான் வேண்டுகின்றேன். நாம் தீவிரவாதிகள் என்றோ, ஒருவர் ஒரு காரியத்தையும் மற்றொருவர் வேறு காரியத்தையும் போதிக்கின்றபடியால் நாம் பிரிக்கப்பட்டு இருக்கின்றோம். என்றோ, உலகம் சொல்லும்படியாக அதற்குத் தருணம் அளிக்க நாடாதீர்கள். மேலும், பிரிவினைகளைத் தவிருங்கள். — TM 57 (1893).கச 67.1