Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சுயத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்

    சாத்தான் ஆளுகை செய்யும்வரை, கீழ்ப்படுத்தப்படவேண்டிய சுயத்தையும், மேற்கொள்ளப்பட வேண்டிய நெருக்கிக்கொண்டிருக்கிறதான பாவங்களையும் நாம் கொண்டிருப்போம். நம்முடைய உயர் இருக்கும் வரையிலும், நான் எல்லாவற்றையும் அடைந்தாயிற்று என்று கூறி அதை அடைக்ககூடிய கட்டமோ, அதை அடையாமல் நின்று போகக்கூடிய இடமோ நமக்கு இருக்காது. வாழ்நாள் முழுவதும் உள்ள கீழ்ப்படிதலின் பலன்தான் பரிசுத்தமடைதல் என்பதாகும். — AA 560, 561 (1911).கச 195.6

    ஜென்ம சுபாவமான மனதிற்கு விரோதமான யுத்தம் எப்பொழுதும் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்; தேவனுடைய கிருபையின் புதுப்பிக்கின்ற செல்வாக்கினால் நமக்கு உதவியளிக்கப்படவேண்டும். அந்தக்கிருபை நமது மனதை மேல்நோக்கி ஈக்கச்செய்து, தூய்மையான மற்றும் பரிசுத்தமான காரியங்களைத் தியானிப்பதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளச் செய்கின்றது. 2T 479 (1870).கச 196.1

    தீமை செய்யத் தூண்டுகிற சாத்தானின் சோதனகளை இல்லாத ஒரு கற்பனை உலகத்தை, அல்லது ஒரு சீர்மிகு சபையை நமது மனதில் நாம் உருவாக்கலாம்; ஆனால் குறைபாடின்மை என்பது நமது மனத்தோற்றத்தில் மட்டும்தான் இருக்கிறது.-RH Aug. 8, 1893.கச 196.2

    மனிதர்கள் பரிசுத்த மாம்சத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, பூமியிலே தங்கியிருக்கமாட்டார்கள். மாறாக, பரலோகத்திர்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். பாவம் இந்த வாழ்க்கையில் மன்னிக்கப்பட்டாலும், அதன் விளைவுகள் முழுவதுமாக இப்பொழுதே நீக்கப்படுவதில்லை. கிறிஸ்துவின் வருகையில்தான் அவர், “நம்முடைய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” — 2SM 33 (1901).கச 196.3