Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அகாஸ்வேரு ராஜாவால் இயற்றப்பட்டதைப் போன்ற மரணச்சட்டம்

    தேவனுடைய மீதமான ஜனங்களுக்கு எதிராக, கொண்டுவரப்படப்போகின்ற கடைசிச் சட்டம் யூதர்களுக்கு எதிராக அகாஸ்வேரு ராஜாவால் பிறப்பிக்கப்பட்ட சட்டத்திற்கு ஒத்தாக இருக்கும். அன்று அரண்மனை வாசலில் நின்றிருந்த மொர்தெகாயை அவனது எதிரிகள் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்ததுபோல, இன்றுகூட ஓய்வுநாள் கட்டளையைக் கடைபிடித்துவருகின்ற சிறு கூட்டத்தாரை, மெய்ச்சபையின் எதிரிகள் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள். தேவனுடைய பிரமாணத்தை அவரது ஜானங்கள் பயபக்தியாகக் கைக்கொள்ளுவது, கர்த்தருக்குப் பயப்படுதலை புறம்பேதள்ளி, தேவனுடைய ஓய்வுநாளைக் காலின்கீழ் மிதித்துக்கொண்டிருக்கின்ற ஜனங்களுக்கு ஒரு தொடர்ச்சியான கடிந்துகொள்ளுதலாக இருக்கின்றது. PK 605 (c. 1914).கச 189.1

    பூமியின் தலைமைப்பீடத்திலிருக்கும் மனிதர்கள் ஒன்றாகக் கூடி கலந்தாலோசித்ததையும், சாத்தானும் அவனுடைய தூதர்களும் அவர்களைச் சுற்றிலும் மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததையும், எழுதப்பட்ட அறிவிப்பு ஒன்றையும் நான் கண்டேன். அதன் பிரதிகள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. அதில் பரிசுத்தவான்கள் தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த விசுவாசத்தை விட்டுவிட்டு, ஒய்வுநாள் ஆசிரிப்பையும் கைவிட்டு, வாரத்தின் முதல்நாளை ஆசரிக்காவிடில், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின்பு அவர்களைக் கொன்றுபோட பொதுமக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று எழுதப்பட்டிருந்ததை நான் கண்டேன். — EW282,283 (1858).கச 189.2

    தேவனுடைய ஜனங்கள் தங்களது நம்பிக்கையை அவர்கள்மீது வைத்து, விசுவாசத்தினாலே அவரது வல்லமையை நம்பி சார்ந்துகொள்வார்களானால், மொர்தெகாயின் நாட்களில் சாத்தானுடைய திட்டங்கள் வியக்கத்தக்க முறையில் தோற்கடிக்கப்பட்டதுபோலவே, நமது காலத்திலும் முறியடிக்கப்படும். — ST Feb.22, 1910.கச 189.3