Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீதிமன்றங்களுக்கு முன்பாக

    உலக சரித்திரத்தின் கடைசி நாட்களிலே வாழ்கின்றவர்கள், சத்தியத்தினிமித்தம் உபத்திரவப்படுவதென்றால் என்ன என்பதை நன்கு அறிந்திருப்பர். நீதமன்றங்களிலும் அநீதியே மிஞ்சியிருக்கும். நீதிபதிகளும் தேவனுடைய கற்பனைகளுக்கு உண்மையாய் இருப்பவர் களின் காரணங்களைக் கேட்க மறுப்பார்கள். ஏனெனில் நான்காவது கற்பனைக்கு ஆதரவான வாக்குவாதங்கள், பதிலளிக்கப்பட முடியாதவை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள், “நமக்கென்று ஒரு சட்டமுண்டு, நம்முடைய அந்தச் சட்டத்தின்படி அவன் சாகவேண்டும்” என்பார்கள். தேவனுடைய பிரமாணம் அவர்களுக்கு ஒன்றுமில்லாததாய் இருக்கும். ஆனால், நம்முடைய சட்டம் என்ற அவர்களது காரியம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மானிட சட்டத்தை மதிப்பவர்கள் ஆதரவளிக்கப்படுவார்கள். விக்கிரக ஓய்வுநாளுக்கு தலைவணங்காதவர்களுக்கு எந்த சலுகையும் காட்டப்படமாட்டாது. — ST May 26, 1898.கச 106.7

    வழக்குகளுக்காக நாம் நீதிமன்றங்களுக்கு முன்பாக கொண்டுவரப்படும்போது, தேவனுடன் எந்த ஒரு முரண்பாட்டையும் அது கொண்டு வராத பட்சத்தில், நமது உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். நமது உரிமைகளுக்காக நாம் மன்றாடுவதில்லை, மாறாக, நமது சேவைக்கான தேவனுடைய உரிமையை நாம் மன்றாடுகின்றோம். - 2MR 69 (1895).கச 107.1