Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மூன்றாவது வாதை

    கிறிஸ்துவின் வேலை ஆசரிப்புக் கூடாரத்தில் முடியும்வரை நான்கு தூதர்களும் பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதையும், அதன் பின்னரே கடைசி ஏழு வாதைகளும் ஊற்றப்படுவதையும் நான் கண்டேன். இந்த வாதைகளோவெனில், துன்மார்க்கரை நீதிமான்களுக்கெதிராக மேலும் கோபமடையச் செய்தது. நாங்கள்தான் தேவனுடைய நியாயத் தீர்ப்புகளை அவர்கள்மீது வரப்பண்ணிணோம் எனவும், எங்களை இந்தப் பூமியிலிருந்து ஒழித்துவிட்டால் வாதைகள் நின்றுபோய்விடும் எனவும் அவர்கள் எண்ணினார்கள். எனவே அவர்களைக் கொன்றுப்போடத்தக்கதாக ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது, விடுதலைக்காக தேவனிடம் இரவும் பகலும் பரிசுத்தவான்களை கதற வைத்தது. — EW 36, 37 (1851).கச 179.1

    “ஆறுகளிலும் நீருற்றுகளிலும்… ஊற்றினான் உடனே அவைகள் இரத்தமாயின.” இத்தகைய வாதைகள் பயங்கரமானதாக இருக்கின்ற அதே வேளையில், தேவனுடைய நீதி முழுமையாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும். “தேவரீர் இப்படி நியாயத்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.” “அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர் அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்” (வெளி. 16:2- 6) என்று தேவதூதன் அறிவிக்கின்றான். மரணத்திற்கென்று தேவனுடைய மக்களைத் தண்டிப்பதன்மூலம் தங்கள் சொந்தக் கைகளினாலே இரத்தத்தைத் சிந்தியதுபோல,அவர்களது இரத்தப்பழியைப்பற்றிய குற்றத்தைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டிருக்கின்றனர். — GC 628 (1911).கச 179.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents