Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    8. பட்டணங்கள்

    ஆதியிலே பட்டணங்களை உருவாக்கியவர்கள்

    தேவனுடைய சாபத்தைப் பெற்றுக்கொண்ட காயீன் தன் தகப்பனது குடும்பத்தை விட்டு வெளியெறினான். நிலத்தை உழுது பயிரிடும் ஒரு விவசாயியாக அவன் முதலாவது தனது வாழ்க்கைத் தொழிலைத் தெரிந்துகொண்டான். ஆனால் இப்போது அவன் ஒரு பட்டணத்தை உருவாக்கி, அதற்கு தனது மூத்த குமாரனின் பெயரை வைத்தான் (ஆதி. 4:17). மீண்டுமாகப் புதுப்பிக்கப்பட்ட ஏதேனின் வாக்குத்தத்தத்தைத் தூர எறிந்துவிட்டு, பாவத்தின் சாபத்திற்குக் கீழாக தனது உடைமைகளை நாடவும், பூமியிலுல்ல இன்பத்தை அனுபவிக்கவும், கர்த்தரின் சமூகத்தைவிட்டு அவன் வெளியேறினான். இவ்வாறாக அவன் இந்த உலகத்தின் தேவனைத் தொழுதுகொண்டிருக்கும் மனிதர்களின் பெரிய கூட்டத்திற்குத் தலைவனாக நின்றுகொண்டிருக்கின்றான். — PP 81 (1890).கச 80.1

    கொஞ்சக்காலத்திற்கு நோவாவின் சந்ததியினர் பேழை தங்கின இடத்திலுள்ள மலைகளின் மத்தியில் தொடர்ந்து வசித்துக்கொண்டிருந்தனர். அவர்களது எண்ணிக்கை பெருகியபோது. மருள விழுகை விரைவில் பிரிவினைக்கு வழிநடத்தியது. தங்களைத் தடைசெய்கின்ற தேவனுடைய பிரமாணத்தை உதறித்தள்ளவும், தங்களது சிருஷ்டிகரை மறக்கவும் விருப்பம் கொண்டிருந்தோருக்கு, தேவனுக்குப் பயந்த தங்களோடு சேர்ந்து பழகிய, தங்களது தோழர்களின் முன்மாதிரியும் போதனையும் ஒரு தொடர்ச்சியான எரிச்சல் மூட்டுதலாய் இருந்தது, எனவே ஒரு காலத்திற்குப் பிற்பாடு, தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொள்ள அவர்கள் தீர்மானித்தார்கள். அப்படியாக, ஐபிராத்து நதியின் கரைகளிலே இருந்த சிநேயாரின் சமவெளிக்கு அவர்கள் பிரயாணம் பண்ணினார்கள்…கச 80.2

    அந்த இடத்திலே ஒரு பட்டணத்தையும், அதிலே உலக அதிசயம் என்று சொல்லத்தகும் வியக்கத்தக்க உயரமான ஒரு கோபுரத்தையும் கட்டத் தீர்மானித்தார்கள். (ஆதி. 11:2-4). — PP 118, 119 (1890).கச 80.3