Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    போராட்டம் கிறிஸ்தவத்தில் மையம் கொண்டிருக்கும்

    கிறிஸ்தவ உலகம் என்றழைக்கப்படுகின்ற உலகமே, தீர்மானிக்கின்ற மாபெரும் செயல்களுக்கான அரங்கமாக இருக்கப்போகின்றது. அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள், போப்புமார்க்கத்தின் மாதிரியைப் பின்பற்றி, மக்களின் மனச்சாட்சியை கட்டுப்படுத்தும்படியாக சட்டங்களை இயற்றுவார்கள். பாபிலோன் தனது வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை சகல ஜாதிகளும் குடிக்கும்படிச் செய்யும். எல்லா நாடுகளும் இதிலே பங்கேற்கும். இந்த நேரத்தைக் குறித்து, வெளி. 18:3-7, 19:13, 14-ல் “இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்” என்று யோவான் கூறுகின்றார். அப்போது, உலகளாவிய ஒன்றுபட்ட ஒரு ஒப்பந்தமும், சாத்தானிய வல்லமைகளின் அரசியல் கூட்டாகிய மாபெரும் ஒரு ஒற்றுமையும் அங்கு இருக்கும். மேலும், “இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.” கடந்த காலத்திலே, ரோமானியத்துவத்தின் மத ஆராதனைளையும் சடங்குகளையும், அனுசரித்து நடக்க மறுத்தவர்களை, போப்பமார்க்கமானது எப்படி உபத்திரவப்படுத்தி செயல்பட்டதோ, அதேபோன்ற அதிகாரமிக்க அடக்குமுறை வல்லமை — மனச்சாட்சியினுடைய அதிகார ஆணையின்படி தேவனைத் தொழுதுகொள்ள ஏற்றவாறு இருக்கின்ற — மத சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படும். — 3SM 392 (1891).கச 99.5

    விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் இடையே நடக்கின்ற இந்த மாபெரும் போராட்டத்திலே, கிறிஸ்தவ உலகம் முழுவதும் ஈடுபடுத்தப்படும். — RH Feb 7, 1893.கச 100.1

    கிறிஸ்தவ உலகம் முழுவதும் இரு பெரும் பிரிவுகளாக, அதாவது தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை உடையவர்களாயிருக்கும் ஒரு பிரிவாகவும், மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி அதன் முத்திரையைத் தரித்துக்கொள்ளும் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படும். — GC 450 (1911).கச 100.2

    பரிசுத்த ஓய்வுநாளைக் குறித்த விஷயம் கிறிஸ்தவ உலகமெங்கும் விவாதத்திற்குரிய விஷயமாக ஆகும்போது, மதத்தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து ஞாயிறு ஆசரிப்பைக் கட்டாயமாக்கும்போது, ஜனங்களிலே சிறுகூட்டத்தினராகிய ஒரு சாரார் இந்த விஷயத்தில் உலகத்தோடு ஒத்துப்போகப் பிடிவாதமாய் மறுப்பதால், அவர்களை உலகமே ஒட்டுமொத்தமாக சபிக்கும். — Ms 615 (1911).கச 100.3

    கிறிஸ்தவ உலகத்தின் வெவ்வேறு அதிகாரிகளால் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகின்றவர்களுக்கு எதிராக உத்தரவு கொடுக்கப்படும்போது, அரசாங்கத்தின் பாதுகாப்பை அவர்களுக்கு விலக்கி, அவர்களை அழித்துப்போடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை ஒப்புக்கொடுக்கும்போதும், தேவனுடைய மக்கள் பட்டணங்களிலிருந்தும் கிரமங்களிலுமிருந்தும் ஓடிப்போய், சிறுசிறு கூட்டங்களாக ஒன்று சேர்ந்து, பாழடைந்த ஒதுக்குப்புறமான இடங்களிலே வாசம்பண்ணுவார்கள். — GC 626 (1911).கச 100.4